23 Sept 2015

சர்வதேச சட்டத்துறை வல்லுநரான மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த கண்ணமுத்து சிதம்பரநாதனுடனான செவ்வி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை எனும் பழம் பெறும் கிராமத்தில் பிறந்த பேராசிரியர் கலாநிதி கண்ணமுத்து சிதம்பரநாதன் தற்போது லண்டனில் வசித்து வருகின்றார்.

கலாநிதி சிதம்பரநாதன் சர்வதேச சட்டத்துறை வல்லுநர். சர்வதேச சட்டத்துறைகளில் பல்வேறு அதி உயர்ந்த பட்டங்களை பெற்றுள்ளவர். இவர் சர்வதேச சட்டத்துறையில்  ஆய்வாளர் அவரது ஆய்வுகளுக்காக இரண்டு கலாநிதி பட்டங்களை பெற்றிருக்கின்றார். லண்டனில் பீ ஆர் சி எனப்படும் பிரித்தானியா அகதிகள் கவுன்சிலிலும் பின்பு சர்வதேச குடிவரவாளர் அமைப்பான ஐ.ஓ.எம் இலும்  கடமையாற்றிவர்.
தற்போது இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்களில் சட்டத்துiயில் விஜயம் செய்யும் பேராசிரியராகவும் கடமையாற்றும் அதேவேளையில் வெளிநாட்டு கல்வி வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஏற்படும் சட்டம் தொடர்பான சிக்கலுகளுக்கு சட்டத்துறை ஆலோசணைகளும் சர்வ தேச குடிவரவாளர்களுக்கான செயற்பாட்டு உதவிகளை தொழில் நிபுணத்துவ சேவையாகவும் செய்து வருகின்றார்.

அண்மைக்காலமாக தான் பிறந்து வளர்ந்த களுதாவளை கிராமத்தில் தனது தந்தையாரின் பெயரில் கண்ணமுத்து ஆசிரியர் நிதியம் என்ற தன்னார்வ அமைப்பை ஆரம்பித்து  கல்வித்துறை முன்னேற்றத்திற்கு பல சேவைகளையும் செய்து வருகின்றார்.

அண்மையில் இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகள் பற்றிய ஆய்வொன்றை செய்து அந்த அறிக்கையை இந்தியாவில் வெளியிட்டவர்.

தன்னை ஒரு அகதியாகவே அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர் அகதிகளுக்காக முக்கியமாக இலங்கை தமிழ அகதிகளின் நலன்களில்  மிகவும் அக்கறை கொண்டவர்.

இலங்கை அரசியலில் தனது ஈடுபாட்டை காட்டிவரும் இவர் எதிர்வரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கான தேர்தலில் முக்கிய தேசிய அரசியற் கட்சியின் சாhபில் களமிறங்கவும் இருக்கின்றார்.  

இவர் அண்மையில் அவரது சொந்த ஊரான களுதாவளைக்கு வந்திருந்தார், அப்போது அவர் தினகரன் நாளிதளுக்கு வழங்கிய செவ்வி.

கேள்வி: -  உங்கள் அரசியல் பங்களிப்பு பற்றி சுருக்கமாக கூறுங்கள்

விடை : - நான் கிழக்கு மாகாணம் களுதாவளையை பிறப்பிடமாக கொண்டவன். எனது தந்தையார் களுதாவளையில் அப்போது புகழ்பெற்று விளங்கிய இராமக்கிருஸ்ணர் பாடசாலையின் தலமை ஆசிரியராக சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இருந்தவர்.  பட்டிருப்பு தொகுதியில் அகில இலங்கை தமிழரசுக் கட்சியை வலுப்படுத்துவதற்கு பாடுபட்டவர்களில் எனது தந்தையும் ஒருவர். 1958ம் ஆண்டு பண்டாரநாயக்கா அரசினால் தமிழரசுக்கட்சியை சேர்ந்த முக்கியமானவர்களை வீட்டு மறியல் வைத்தார்கள். அப்போது எனது தந்தையும் சுமார்  ஆறு மாத காலமளவில் மறியல் இருந்தவர். அப்போது எனக்கு 10 வயதாகும். எனது தந்தையுடன் நாங்களும் மறியல் வைக்கப்பட்டோம். அப்போது நடந்த சிங்கள சிறி எதிர்ப்பு போராட்டத்தில் எனக்கு அரசியல் அறிவே இல்லாத நேரத்தில் பங்கு கொண்டேன் பாடசாலை காலத்தில் பட்டிருப்பு தொகுதியில் தமிழரசுக்கட்சி பாராளுமன்றத்தில் வெற்றி பெறவேண்டும் என்று அரசியல் பிரசாரம் செயவதிலும் ஈடுபட்டிருக்கின்றேன். 

1986 ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறி ஐக்கிய இராச்சியத்திற்கு சென்று இப்போது அங்கு வாழ்ந்து வருகின்றேன்.

2006 ஆம்ஆண்டளவில் லண்டனிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் கிளையில் அங்கு வாழும் பல தமிழர்கள் இணைந்து கொண்டு அதன் மூலம் இலங்கையில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பலரும் விரும்பினார்கள் அந்த வேளையில் நானும் இணைந்து கொண்டேன்.  அந்த காலப்பகுதியில் அந்த கட்சியின் ஐக்கிய இராச்சிய கிளைக்கு உதவி செயலாளராகவும் சுமார் மூன்று வருடங்கள் செயற்பட்டுவந்தேன். இந்த காலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் உட்பட பலருடன் நான் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

கேள்வி : - தற்போது இலங்கைக்கு வந்துள்ளீர்கள், உங்கள் கிராமத்திற்கும் வந்துள்ளீர்கள், அன்றைய  அரசியல் மற்றும் தற்போதைய அரசியல் பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள். 

விடை : - நான் வாழ்வது பிரித்தானியா. ஜனநாயகத்தை, மனித உரிமைகள், அடிப்படை உரிகள் என்பன வெகுவாக பாதுகாக்கப்படும்  அந்த நாட்டில் வாழ்ந்த காரணத்தினால் இலங்கை அரசியல் பற்றிய எனது நிலைப்பாடு வெகுவாக மாறிவிட்டது. பிரித்தானியாவில் மாதிரம் இல்லை பல தேசிய இனங்கள் வாழ்கின்ற கனடா. ஆமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது இன ரீதியான அரசியலை நடத்தவில்லை.  சிங்கள அரசியல் வாதிகள் தங்களது  சிங்கள இன வாத அரசிலை 1948 ஆம் ஆண்டுக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள். தமிழ் அரசியல் வாதிகள் அதற்கு மாற்றாக தங்களது இனவாத அரசியலை ஆரம்பித்து இன்று வரை இனவாத அரசியலையே  சகலரும் அரசியல் நடாத்துகின்றார்கள். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

கேள்வி :- அண்மையில் நடந்து முடிந்த தேர்தல பற்றியும் இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசாங்கம் பற்றியும் உங்கள் கணிப்பு என்ன?

விடை : - தமிழரசு கட்சியை தமிழ் மக்கள் தங்களது பிரதிநிதிகள் என்பதனை மீண்டும் உறுதி படுத்தியிருக்கின்றார்கள் தேர்தலின்போது தமிழ் வாக்காளர்களுக்கு  தமிழரசு கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என நினைக்கின்றேன். தற்போதைய அரசாங்கமும் அதற்கேற்ப தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிபார்கள் என்றுதான் நம்புகின்றேன். தமிழரசு கட்சியின் முன்வைத்த சமஸ்டி முறையான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய  வட கிழக்கு இணைந்த சுய ஆட்சி என்பது பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு தமிழர்கள் தனிநாடு கேட்கிறார்கள் என்ற உணர்வை கொடுப்பது போல் இப்போது தென்னிலங்கையில் பிரச்சாரம் செய்யப்டுகின்றது. சர்வதேச நாடுகளின் உதவியுடன்  இதை பெற்றுக் கொள்ள தமிழரசு கட்சி தொடர்ந்து பாடுபடும் என கூறப்பட்டுள்ளது. தமிழர் தரப்புக்கள் சர்வதேசம் என்று கூறுவது முக்கியமாக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்pய நாடுகளைத்தான்  என நான் நினைகின்றேன்.

கடந்த காலங்களில்  13 வது திருத்தத்திற்கு  பங்காளிகளான இந்தியாவே எதையும் செய்ய முன்வரவல்லை. இந்தியாவிடம் பல தடவைகள் தமிழ் தரப்புகள்  பேசிப்பார்த்தார்கள். பேச்சு வார்த்தைகளின் பின்பு அவர்கள் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவார்கள் அதாவது. எமது பேச்சு வார்த்தை ஆரோக்கியமாக இருந்தது. எமது பிரச்சனைகளில் அக்கறை இந்தியா காட்டும் என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால், இந்தியா தரப்பில்  எவரும் மூச்சு விட மாட்டார்கள் இதுதான் உண்மை நிலை.

எதிர்காலத்திலும் இந்தியாவாக இருக்கட்டும் அல்லது மற்றயை சர்வ தேச நாடுகள் எதுவாக இருந்தாலும் தமிழர் பிரச்சனைகளில் ஆக்கூடியது ஒரு கரிசணையை  காட்டுவார்களே!  தவிர  எந்;த சந்தர்பத்திலும் இலங்கை அரசுடன் தமிழர் பிரச்சனைக்காக தலையாடுவார்கள் என்ற நம்பிக்கை தமிழர் தரப்புக்கு இருக்குமாயின் அது  அவர்கள் தங்களை  ஏமாற்றிக் கொள்வது மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றுவதாகும்.  எனவே இப்போது ஏற்பட்டிருக்கின்ற ஒரு வித்தியாசமான அரசியல சூழ்நிலையில் தமிழர் தரப்பு இணைந்த அரசியலை நடாத்தி பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை காண முயல்வது நல்லதென நினைக்கின்றேன்.

கேள்வி : - உங்களது பார்வையில் இனப்பிரச்சனைக்கு 13 வது அரசியல் திருத்தமே போதுமென்கிறீர்களா?

விடை : - நான் அதுதான் போதுமென்றோ அல்லது போதாது எனறோ சொல்லவில்லை. அதனை முழுமையாக பயன்படுத்தவதற்கு தமிழ் மக்களுக்கு கிடைத்தாலே அதுவே  தமிழர் தரப்புக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும. சமஸ்டி ஆட்சி, சுயநிருணய உரிமை, சுயஆட்சி என்பதையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு இன்றைய காலகட்டத்தில, தமிழ் மக்களுக்கு உரிய முக்கிய பிரச்சினைகளான  வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் காணிகளும் அரச காணிகளின் பயன்பாடும். மற்றையது பாதுகாப்பு இந்த இரண்டுக்கும் 13 வது அரசியல் அமைப்பில் தீர்வு உள்ளது.  13 வது அரசியல் தீர்வுக்கு சொந்தக்காரரான இந்திய அரசு இதற்கு முக்கிய  அழுத்தததை கொடுக்க தமிழர் தரப்பு இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கேள்வி : - வட கிழக்கு மாகாண இணைப்பு பற்றி உங்கள் கருத்து என்ன? 

விடை : - நான் ஒரு அரசியல் வாதி இல்லை. நான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சாதாரண மக்களில் ஒருவன்.  இந்த  கேள்விக்;கு எனது நிலைப்பாட்டில் பதில் சொல்வதானால்.  மாகாணங்கள் ஏன் இணைக்கப் படவேண்டும். வடக்கு வேறாகவும் கிழக்கு வேறாகவும் இருந்தால் என்ன? வடக்கு அரசியல் வாதிகள் கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் அதனை இணைத்;துதான் செய்யமுடியும் என்பது இல்லை. பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்ந்த கிழக்கு மாகாணத்தில் இப்போது சிங்களவர்கள் முஸ்லீம் மக்கள்  சமமான எண்ணிக்கையில் வாழ்கின்ற மாகாணமாக மாற்றபட்டு விட்டது. இதை நான் எனது பார்வையில் சரியான இனப்பரம்பலாகாகவே பார்கின்றேன்.  வடக்கு  கிழக்கு இணைத்த மாகாணத்தில  சிங்கள- முஸலீம் மக்களை சிறுபான்மை இனமாக பார்க்க அந்த மக்களுக்கு விருப்பம் இல்லையென்பதை அண்மைக்காலமாக அறிந்து கொண்டு இருக்கின்றோம்.   மாகாணஙகள் இணைவது பற்றி அந்த மாகாண மக்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர  அரசியல் வாதிகள் அல்ல.   

கேள்வி : - சர்வதேச சட்டங்களில் முக்கியமாக மனித உரிமைகள் மற்றும் குற்றவியல் சட்டம் மூலம் போன்றவற்றில் நீங்கள் ஆய்வுகள் செய்து பட்டங்களை பெற்றிருக்கின்றீர்கள். இலங்கையில் நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுகக்கள் பற்றிய விவகாரங்களில் இந்த விசாரணை எந்த  அளவுக்கு செல்லும் என்று கருதுகின்றீர்கள்

விடை : - முதலில் அமெரிக்காவுக்கும், இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் எனபதற்கும் உள்ள தொடர்புகளை சற்று பார்போம்  இலங்கை அரசுக்கு எதிரான  பிரேரணையை அமெரிக்க  தானாக முன்வந்து கொண்டு வருவதற்கு காரணம் அது இலங்கை தமிழ் மக்களில் வைத்திருந்ந அக்கறையோ அல்லது மனித உரிமை விவகாரங்களில் அதனுடைய கரிசணையோ இலலையென்பதை  சகலரும் அறிந்த உண்மை.

சீனாவுடன் மகிந்த அரசு கொண்டிருந்த உறவு அமெரிக்காவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. பல நாடுகளில் தனக்கு விரும்பாத அல்லது தன்னுடன் ஒத்துப்போகாத நாடுகளின் தலைவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிய வரலாறுகள் உண்டு. மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்றுவது அமெரிக்காவுக்கு அவ்வளவு சுலமான காரியமில்லை. காரணம்  யுத்தம் இடம்பெற்ற பின்பு  தேர்தலில் மகிந்தவுக்கு கிடைத்த மக்களின் ஆதரவு அமெரிக்காவின் திட்;டத்தினை அதாவது “ரெஜீம் சேஞ்” என்ற ஆட்சியை மாற்றுவது இலகுவாக  செயல்படுத்த முடியாத நிலை. 

இந்த நேரத்தில்தான் யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் சர்வதேச ஊடகங்களில்; வெளிவர ஆரம்பித்தன. இதுதான் நல்ல தருணம் என்பதை உணர்ந்த அமெரிக்கா முண்டியடித்து பிரேரனையை முன்வைத்தது. மிகவும் கடுமையான பிரேரணைகளை மும்மொழிந்து, சீன சார்பான நாடுகளிடம் மூக்குடைபடுவதையும் அமெரிக்கா விரும்பாமல் எப்படியோ காலம் போனாலும் மகிந்தாவை விசாரணை  என்ற பெயரில்; பயமுறுத்திக் கொண்டிருக்கலாமென்று எதிர்பார்த்தது. 

ஆனால் எவரும் எதிபாராதவிதமாக மக்கள் மகிந்தாவை ஆட்சியில் இருந்து அகற்றினார்கள். ஆமெரிக்காவின் எண்ணம் சுலபமாக முடிந்தது.  இப்போது  இலங்கையில் எவ்வித கரிசணையும் அமெரிக்காவுக்கு கிடiயாது. ஆனால் அது முன்வைத்த பிரேரணையை திரும்பி பெறமுடியாத நிலையில்   விசாரணைகள் அறிக்கை எப்படியும் வெளியிடப்படுவதை அமெரிக்கா தடை செய்ய முடியாத நிலையிலும் அதேவேளை,  சர்வதேச விசாரணையொன்றை இலங்கைக்கு எதிராக கொண்டுவருவது இலகுவான காரியம் இல்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா அறிந்து வைத்துள்ளது. 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அரசாங்கத்தை விசாரிப்பதற்கான உரிமையை அந்த நீதி மன்றத்திற்கோ அல்லது வேறு விசேட நீதி மன்றத்தை அமைத்து இலங்கை அரசை கட்டுபடச் செய்வதற்கோ ஐ.நா.பாதுகாப்பு சபையினால்  விசாரணைக்கான ஒரு நீதிமன்றத்தை அமைத்து அதற்கு இலங்கையை கட்டுப்படுத்த செய்வதானால் ஐ.நா. பாதுகாபபு சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றபட வேண்டும். 

சீனாவின் வீட்டோ அதிகாரமும் ரஸ்சியாவின் எதிர்ப்பும் இதனை இலகுவாக செய்ய முடியாத நிலையைத்தான் உருவாக்கும். அவ்வாறான தீர்மானமின்றிய எந்த அழுத்தங்களுக்கும் இலங்கை  அடி பணியப்போவதில்லை என்பதையும் அமெரிக்கா மாத்திரமின்றி அமெரிக்காவிற்கு அதரவான நாடுகளுக்கும் தெரியும்.  சர்வதேச விசாரணைதான் வேண்டுமென்று பாதுகாப்பு சபையில் தீர்மானாம் ஒன்றை எந்தவொரு நாடு கொண்டு வந்தாலும்; சீனா  அதற்கு எப்போதும் ஆதரவளிக்காது. காரணம் மகிந்த அரசுக்கும் சீனா அரசுக்கும் இருந்த உறவு மாத்திரமின்றி, வன்னியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முக்கியமாக உதவும் நாடாக இருந்தது சீனா என்பதை அண்மையில் சரத் பொன்சேகா மீண்டும் உறுதிபடுத்தியிருந்தமை வெளிக்காட்டுகின்றது.   

கேள்வி : - உள்ளக விசாரணையென்று இப்போது அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்த விசாரணை எவ்வாறு அமையும்? அதனால் பாதிக்கப்;பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? 

விடை : - கடந்த தேர்தலின்போது மகிந்தவுக்கு மக்கள் ஆதரவாக இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. சுதந்திரக்கட்சிக்குள் ஏற்ப்பட்ட பிளவுகள் மைத்திரிக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சிக்கும் வாக்குகள் அதிகளவு கிடைத்தன. மகிந்தவை நிரந்தரமாக அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டுமென்பதிலும் திரும்பவும் இலங்கை அரசு சீனாவுடன் உறவை பலபடுத்துவதற்கு சந்தர்பத்தை இல்லாமல் செய்வதற்கும் அமெரிக்கா திட்டம் தீடடினால், இந்த உள்ளக விசாரணைகளை அதற்கேற்ப கொண்டு செல்ல தற்போதைய இலங்கை அரசை இணங்கச் செய்வதில் அமெரிக்கா முயற்சிக்கும்.


யுத்தம் இடம்பெற்றபோது சகல பாதுகாப்பு படைகளுக்கும் பொறுப்பாக இருந்தவர் ஜனாதிபதியே அதனால் போர்க்குற்றங்களுக்கு அவர்தான் குற்றவாளி என தீர்ப்புகள் கொண்டு வரப்படும்போது வேறு வழியில்லாமல் இலங்கை அரசு மகிந்தவை தண்டிக்க வேண்டிய கட்டாயத்திறக்கு தள்ளப்படும். குற்றங்கள் நிருப்பிக்கபடும்போது அந்த குற்றங்களினால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பது என்பது தவிர்க்க முடியாததது.

உள்ளக விசாரணையென்பது. அது இலங்கையின் உள்விவகாரம் அதானால் அதன்படி இலங்கையே விசாரணைசெய்ய வேண்டுமென்று   தீhமானம் அமையப் போவதில்லை. உள்ளக விசாரணையை சர்வதே தரத்தில் அதன் தலையீட்டுடன் இடம் பெறவேண்டமென்பதை இலங்கை அரசு ஒத்துக் கொள்ள வைப்பதையே பல நாடுகள் விரும்பும் என நினைகின்றேன். 

சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் வழிகாட்டலில் அல்லது ஐ.நா.மனத உரிமைகள் மன்றத்தின் சர்வதேச  இலங்கை நீதபதிகளுடன்  அடங்கிய விசாரணையொன்றை இலங்கையில் இடம் பெறுவதையே சர்வதேசம் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யப்படா விட்டால் அந்த விசாரணை ஒரு கண் துடைப்பாகவே முடியும்.

கேள்வி: - வெளிநாடுகளில் வாழுகின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் தமிழீழம் அமைக்கபட வேண்டும் என்று இப்போதும் போராட்டம் நடாத்துகின்றார்கள். இப்போதும்  புலிகள் இயக்கம் பல நாடுகளில் இயங்குகின்றன என அறியப்படுகின்றது.. அவர்கள் எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

விடை : - 1983 இற்கு பின்பு  புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நாடுகளில் இருந்த பேச்சு உரிமை போன்ற  அடிப்படை உரிமைகளை  சாதகமாக ஆக்கிக் கொண்டு, புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வந்தாhகள். அது மாத்திரமின்றி புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள்தான இந்த யுத்தத்தை தொடர்ந்து நடாத்துவதற்குரிய பணப் பலத்தை அளித்தும் வந்தார்கள்.  

முள்ளி வாய்க்கால் அவலத்தின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்டபோது புலிகளுக்கு பண பலத்தை அளித்த   இந்த புலம்பெயர்ந்த மக்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற மன வேதனையில், குற்ற உணர்ச்சியில்  வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அது மாத்திரமின்றி தமிழீழம் என்ற கோட்பாட்டுடன் போராடி  மடிந்த சுமார்  இரண்டு லட்சத்திற்கு மேலான தமிழ் உயீர்களின் தியாகம் வீணாகிவிட வேண்டுமா  என்ற  வேதணையிலும பல ஆயிரம் மக்கள்  தொடர்ந்தும் புலிகள் இயக்கததை புலம்பெயர் நாடுகளில் அழிந்து விடக்கூடாது என்ற விடாபிடியுடன் தமிழீழம் என்ற ஒன்றை உருவாக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை தொடர்ந்து நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் எதிர்பார்பும் இந்த போராட்டங்களும் இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும.;

கேள்வி : - அமெரிக்கா. பிரித்தானிய மற்றும் பல ஜரோப்பிய நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என தடைசெய்துள்ளபோதும், இப்போதும் புலிகள் இயக்கதத்தினர் தங்கள் புலிக்கொடிகளை தாங்கிய படி வெளிப்படையாக போராட்டம் நடத்துகின்றார்களே. அது எப்படி? அந்த அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லையா?. 

விடை : - நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த நாடுகள் ஒவ்வொன்றும் பயங்கரவாத இயக்கம் என்பதற்கு வௌ;வேறு வியாக்கியானங்களை கொடுத்துள்ளார்கள். பொதுவாக அப்பாவி மக்களை துன்புறுத்துவது கொல்வதும் பயங்கரவாம் என்பதையே அடிப்படையக கொண்டாலும்  அந்த இயக்கங்கள் தங்களது நாடுகளில் இயங்குவதற்குரிய அனுமதிகள் வௌ;வேறுபடுகின்றன. இந்த அடிப்படையில் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது அந்த அமைப்பின் பெயரிலோ எவ்வித பயங்கரவாத நடவசடிக்கைகளில்; ஈடுபட்டதாக எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை. அமைதியான முறையில் தங்களது போராட்டங்களை நடாத்த அங்கு தடைகள் இல்லை.

கேள்வி : - வட மாகான சபை நடந்து முடிந்த யுத்தம் இனப்படுகொலைதான் என தீர்மானம் நிறை வேற்றினார்கள். தமிழ் நாடு சட்டமன்றத்தில் தமிழ் ஈழத்திற்க்கான வாக்கெடுப்பு ஒன்று நடத்த வேண்டுமென்று தீர்மானம் நிiவேற்றினார்கள். இப்படியான தீhமானங்களினால் தமிழர்களுக்கு ஏதாவது விமோசனம் ஏற்படுமா? சர்வதேச சட்டங்களின் படி அதற்கு வழிகள் இருக்கிறன்றனவா?

விடை : - இனப்படுகொலை அல்லது ஒரு இனத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் என்பன பற்றியும் அதற்காக ஐ.நா சபை எடுக்க வேண்டிய நடிவடிக்கைகள் பற்றியும்  மனித உரிமைகள் சாசனம் மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிரான சாசனம் என்றெல்லாம் மிகவும் தெளிவான சட்டங்கள் சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிகப்பட்ட எழுத்து வடிவத்தில் இருக்கின்றன. 

இந்த சட்ட மூலங்களின் அடிப்படையில்  பல நாடுகளில் இனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற்று அதற்காக பரிகாரங்களும்; காணப்பட்டுள்ளன.  அண்மைக் காலத்தில் தனிநாடாக பிரகடணப்படுததப்பட்ட தென் சூடான் அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட திர்மாணஙகள் எமது மனநிலைகளை.  கரிசணைகள், எதிர்ப்புகளை சர்வதேசத்துக்கு வெளிகாட்டும் ஒரு செயற்பாடே தவிர  விசாரணையொன்றின் மூலம்  இனப்படுகொலைதான் என்று நிரூபணம் ஆகும்வரை அதற்காக எந்தவித தடையும் இருக்காது. அவை தீர்மானங்களாகவே இருக்கும்.  

கேள்வி : - புதிய அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களை திரும்ப இலங்கைக்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுகின்றார்களே. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீகள்.?

விடை : - இது ஒரு நல்ல ஆரோக்கியமான விடயம். புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறும்போது தமிழர்களை மாத்திரம் கருத முடியாது என்றாலும் 90 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்களையே குறிக்கின்றது. ஆமைச்சர் மங்கள சமரவீர இது பற்றி அறிவித்தவுடன் நான் அது பற்றி அவருக்கு சில முக்கிய வியடங்கள் தொடர்பாக கடிதம் ஒன்றை எமுதினேன். அதில் முக்கியமாக சில விடயங்களை குறிபிட்டு இருந்தேன்.  

வருபவர்களின் பாதுகாப்பு, இறங்கு துறையில் ஏற்படுகின்ற அநாவசிய தொல்லைகள், கெடுபிடிகள், வட கிழக்க மாகாணங்களுக்கு சுதந்திரமான போக்குவரத்து, நடமாட்டம் என்பன. அமைச்சர் மங்கள சமரவீர புலம் பெயர்ந்தவர்களை நாடு திரும்பும் படி கேட்பதாவது, நிரந்தரமாக நாடு திரும்ப வேண்மென்பதை குறிப்பிடவில்லை. புலம் பெயர்ந்தவர்கள் நிரந்தரமாக நாடு திருபம்புவதா அல்லது தற்காலிக நாடு திரும்மி அங்கு தங்களது பங்களிப்புக்களை செய்வது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகும் இதில் அடுத்தவர்கள் தலையிட முடியாது. 

கேள்வி : - தமிழர்களுக்கு எதிரான யுத்தக்குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்கின்ற இந்த வேளையில் தமிழர்கள் நாடு திரம்புவது அல்லது இந்த அரசுக்கு ஆதரவளிளப்பது என்பது அதனை மழுங்க  செய்துவிடுமென ஒரு சாரார் கருதுகின்றார்களே. 


விடை : - அதை நான் முற்றாக ஏற்றுக்கொள்வில்லை. ஒரு விடயத்தை நான் முகிகயமாக கூறவிரும்புகின்றேன். இலங்கை தழிழ் அரசியல் வாதிகளும் வெளி நாடுகளில வாழ்கின்ற புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிப்பட்வர்கள் எவாரக இருந்தாலும், எமக்கு முன்புள்ள பி;ரச்சனைகளை ஒன்றுடன் ஒன்றை இணைத்து குழப்பிக்கொண்டிருப்பது வரவேற்க தக்கது ஒன்றல்ல. 

தமிழர்கள் இனப்பிரச்சனை, போர்க் குற்றம,; தமிழர் தாயக அபிவிருத்தி என்பனவற்றை வௌ;வேறாக பார்பது மட்டுமின்றி வௌ;வேறாகவே அணுகவும் வேண்டும. இன்று வட-கிழக்க மகாணத்தில் முக்கியமாக வன்னி மாவட்டத்தில யுத்தத்தினால் பாதிப்பு அடைந்த  மக்களுக்கு அவர்கள் நாளாந்த வாழக்கையை கொண்டு நடத்த முடியாத பலதரப்பட்ட தேவைகளை  பெறமுடியாமல் இருக்கின்றார்கள். 

இலங்கை மற்றும் சர்வதேச அரசாங்கம், சர்வதேச அமைப்புகள் அவர்களுக்கு செய்வதை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற சகல துறைகளிலும் உள்ளவர்கள் அங்கு சென்று அவர்களின் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். புலம் பெயர் நாடுகளில் வர்த்தக துறையில் முதலீடு செய்து உள்ளவர்கள் அதில் சிறு பகுதியை அங்கு கொண்டு சென்று சிறு வியாபார நிலையங்களையோ அல்லது பெரிய அளவிலான உற்பத்தி நிலையங்களை அமைத்து  அங்குள்ளவர்களுக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி அதனால் அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கவோ அல்லது பெருக்கவோ முடியும். அதுமாத்திரமின்றி அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் உருவாக்க முடியும்.

கேள்வி :- யுத்தம் முடிவடைந்த பின்பு புலம் பெயர் தமிழர்கள் பல உதவிகளை செய்கின்றார்கள். பல்வேறு உதவி திட்டங்களை உருவாக்கி  உதவி செய்கின்றார்கள். எமது கனடாவை எடுத்துக் கொண்டால் பல அமைப்புக்கள் தனிப்பட்டவர்கள் பல் வேறு வகைகளில்   பணம் சேர்த்து அனுப்புகின்றார்கள். அது போதாது என்கிறீகளா?

விடை : - அதை நான் மறுக்கவில்லை. ஆனால் புலம் பெயர் தமிழர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ ஒன்றிணைந்து பெரிய அளவிளான முதலீடுகளை செய்து பல நூறு இளைஞர்களுக்கு வேலை வாயப்பை அளிக்கின்ற திட்டங்களை மாகான சபையின் அனுமதியுடனோ அல்லது அரசாங்கத்தின் உதவியுடனோ செய்ய முன்வர வேண்டும்;. 

கேள்வி : - இந்தியாவில் வாழும் தமிழ் அகதிகள்பற்றி நீங்கள் ஆய்வொன்றை செய்திருந்தீர்கள். இது பற்றி கூற முடியுமா?

விடை : - தமிழ் அகதிகள் நாடு திரும்புதல் பற்றிய ஆய்வாகவே இது இருந்தது. தமிழ் நாடடிலுள்ள 108 முகாம்களில் கூமார் 1000 க்கும் மேற்பட்டவர்களை நேரில் சந்தித்தது நேர் காணல் மூலமும் கேள்விக் கொத்து ஒன்றை நிரப்புவதன் மூலமும்  தகவல்கள் அறியப்பட்டன. 

இந்த ஆய்வு சுமார் மூன்று வருடங்கள் இடம்பெற்று கடந்த மார்ச் மாதம் இராமேஸவரத்திலும் தமிழகத்தின் வேறு சில இடங்களிலும்; இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. எனது ஆய்வின் முடிவுகள் நாடு திரும்புவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் திரும்புவதற்கு ஆயத்தம் இல்லாதவர்களின் காரணஙகள் பற்றி மிகவும்  தெளிவாக அந்த அறிக்கையில் வெளிக்கொணடுவரப்பட்டு இருந்தது. 

சுருக்கமாக சொல்வதனால் சுமார்; 60 வீதமானவர்;கள் நாடு திரும்பும்; நோக்கமே இப்போது கிடையாது. அண்மைக்காலங்களில் அதாவது, கடந்த 10 வருடங்களில் அகதிகாளாக வந்தவர்கள் முக்கியமாக மண்டபம் முகாம் போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக காணப்படுகின்ற  இடஙகளில் உள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு முயற்சிப்பார்கள். இந்திய பிரஜைகளை திருமனம் செய்து குடும்பமாக வாழ்பவர்கள் இந்தியாவை தங்களது நாடகவே கொண்டுள்ளார்கள். அவர்கள் திரும்பும் எண்ணம் அறவே கிடையாது.  

கேள்வி : - இந்தியாவில் இருக்கம் இலங்கை  தமிழ அகதிகள் மொத்த எண்ணிக்கை பற்றி வௌ;வேறு  தகவல்கள் வெளிவருகின்றன. உண்மையில் அங்கு வாழும்  அதாவது தற்போது வாழும் தமிழ் அகதிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவாக இருக்கிறது?

விடை : - நீங்கள் கூறுவதில் உண்மையுள்ளது. எனது ஆய்வின்போது அங்கு வாழ்கின்ற இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கையை சரியான முறையில் அறிந்து கொள்ளக்கூடிய தகவல்கள் எவரிடமும் இல்லை. மாநில மற்றும் மத்திய அரச அதிகாரிகள் முகாம்களில் வாழும் மக்களையும் முகாம்களுக்கு வெளியில் பதிவுடன் வாழ்வோரின்; எண்ணிக்கையைதான் வைத்திருகின்றார்கள்.  பதிவு இல்லாமல் பல ஆயிரம் தமிழ் அகதிகள் வாழ்வதாக பல்வேறு தரப்புக்களினாலும உறுதி படுத்தப்படுகின்றது.

அரச பதிவேடுகளின்படி 1983ம் ஆண்டு முதல இன்று வரை சுமார்  மூன்று இலடசம் தமிழ அகதிகள் வந்து இறங்கியதாககவும் அதேவேளை இது வரை காலத்திலும் சுமார் ஒரு இலட்சம் நாடு திரும்பினார்கள் அல்லது வேறு நாடுகளுக்க சென்று விட்டதாகவும் கணிப்பீடுகள் வைத்திருக்கிளன்றார்கள். இந்த எண்ணிக்கை மிகவும் மிகைபடுத்தப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரை அங்கு சுமார் இரண்டு இலட்சம் தமிழ் அகதிகள் இன்னமும் வாழ்கின்றார்கள் என்றே நம்புகின்றேன் 


கேள்வி: - தற்போது இலங்கைக்கு வந்துள்ளீர்கள் மாற்றங்கள் எவ்வாறு இருக்கின்றன.?


விடை : - நான் பல தடவைகள் கொழும்புக்கு சௌ;று வந்துள்ளேன். இந்தியாவிற்கு போகும் போதும் வரும் போதும் கொழும்பில் சில நாட்கள் தங்கி வந்துள்ளேன். ஆனால் அண்மையில்தான் நீண்ட நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு சகல பகுதிகளுக்கும சென்று வந்தேன்.  நான் 30 வருடங்களுக்கு முன்பு பாத்த யாழ்ப்பாணமாக இல்லை. முன்னேறிவிட்டது. சுருங்க கூறப்போனால் எல்லாவற்றிலும் முன்றேனற்றம். கலச்சார சீரழிவுகள் பற்றி ஊடகங்கள் மூலம் அறிந்திருந்தேன். அவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

வன்னி  முல்லைதீவு மாவட்டஙகள் அழிந்து விட்டன. நாம் நிறைய செய்ய வேண்டியள்ளது. கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை தனிபட்டவர்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் முக்கியமாக மத்திய தரை கடல் பிரசேங்களில் வேலை வாய்பு;புக்களை பெற்று சென்றுள்ளவர்கள் தங்கள் வசதிகளை மேம்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதை விட  நகர கிராம அபிவிருத்தி ஒப்பிட்டு அளவு முன்னேற்றம் இல்லை.

கேள்வி: - நீங்கள்  கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு களமிறங்க இருப்பதாக அறிகிறோம். அது பற்றி சிறிது கூறுங்கள். 

விடை : - நீங்கள் என்னை அறிமுகப்டுத்தும் போது நான் எதிவரும் மாகாண முதலமைச்சர் பதவிக்கு களமிறங்க இருப்பதாக கூறினீர்கள். இந்த தகவல்கள்  உங்களுக்கு எப்படி கிடைத்ததோ எனக்கு தெரியாது

மன்னிக்க வேண்டும் குறுக்கிடுவதற்காக- உங்களுடன் சேர்ந்தவர்கள் மூலம்தான நான் அறிந்து கொண்டேன்.

நல்லது. இது என்னை சேர்ந்தவர்களின் விருப்பமாகும் நான் புலம் பெயர்ந்து வாழ்கின்ற  காலத்தில் பெற்றுக் கொண்ட கல்வி அறிவு, அனுபவங்கள், தொழில் சார்ந்த தேர்ச்சிகளும் நான் பிறந்த தாயகத்திற்கு எப்போதவது எனது வாழ் காலத்தில் பயனுள்ளதாக  வேண்டுமென்ற ஆதங்கம் எப்போதுமே இருந்து வந்துள்ளது.

நான் மாத்திரமில்லை என்னை போன்று பல ஆயிரம் பேர்கள்; இருக்கின்றர்கள்.  நான் ஒரு அரசியல் வாதியாகவோ அல்லது அரசியலில் இறங்கவோ எண்ணம் கிடையாது. ஆனால் எனது பங்களிப்பை செய்யவேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றேன். நான் பிறந்த கிராமத்திற்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இப்போது இருந்தே நானும்  என்னைப் போன்ற பல நண்பர்களுடன் சேர்ந்து  ஏதாவது செய்வது பற்றி சில முயற்சிகளை ஏடுத்துக் கொண்டு வருகின்றோம்  ஒட்டு மொத்த கிழக்கு மாகாணம் முன்னேற்றவும் பல வழிகள் உண்டு வசதிகள் உண்டு அவை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அதனை செயல்படுத்தி அந்த மக்களின்; வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபட வேண்டுமென்று விரும்புகின்றேன். 

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு சென்ற போது பலர் பல்வேறு யோசணைகளை முன்வைத்தார்கள். அதில் ஒன்று கிழக்கு மாகாணத்திற்குரிய முதலமைச்சா பதவி ஒரு பொருத்தமான வழியென்றும் குறிப்பிட்டர்கள். நான் அதனை வெகுவாக கவனத்தில் எடுத்துள்ளேன். காலம் வரும்போது அது பற்றி  யோசிக்கலாமென்று இருக்கின்றேன். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: