தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்காக வேண்டி கடந்த காலங்களிலிருந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அகிம்சை ரீதியாகவும். ஆயதமேந்தியும் போராடி தற்போது அரசியல் ரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு படிப்படியான தீர்வுகள் கிடைப்பதற்குரிய சமிக்ஞைகள் கிடைப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
இருந்த போதிலும், தமிழ் மக்களின் நிலங்களில் குடியிருக்கும், இராணுவதினரின், வெளியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, போன்ற பல விடையங்களில் இதுவரை எட்டாக் கனியாகவே உள்ளது.
இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வி.
கேள்வி : - நீங்கள் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள், இலங்கையில் அப்போதைய காலகட்டத்தின் அரசியல் செயற்பாடுகளுக்கும், தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பிலும், என்ன கருதுகின்றீர்கள்.
விடை : - நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டம், 1989 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு காலப் பகுதியாகும், அக்காலத்தில், வெடிச் சத்தங்களும், குண்டுச் சத்தங்களும், கேட்டுக் கொண்டிருந்த காலமாகும். அக்காலத்தில் ஒப்பந்தங்களும். சமாதான உடன்படிக்கைகளும் இருந்தன. மக்களும் ஓரளவும் நிம்மதியாக இருந்தார்கள், பின்னர் 1990 ஆம், ஆண்டு யூன் மாதம் 10 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும், இடையில் உடன்படிக்கை கைச்சத்திடப் பட்டடிருந்தது. அவ்வுடன்படிக்கை செயலிழந்த பின்னர் இருசாராருக்கும் மோதல் இடம்n பற்றது. மக்கள் மத்தியில் பதட்டம் காணப்பட்டது.
அப்போது வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையாக இருந்தது. பின்னர் அப்போதிருந்த இணைந்த வடகிழக்கு மாகாணசபையும், செயலிழந்து ஆளுனரின் அதிகார்ததின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. அப்போத நாடாளுமன்ற உறுப்பினராகிய இருந்த நாங்கள், எமது நபடாளுமன்ற வேலைகளோடு சேர்த்து மாணாக சபை வேலைகளையும், முன்னெடுத்துச் செல்ல வேண்டியதாக இருந்தது. இருந்த போதிலும், அக்காலகட்டத்தில், மக்களின் தேலைகளைப் பூர்தி செய்வதில் பாரிய சிக்கல் நிலமை ஏற்பட்டிருந்தது.
ஆனால் தற்போது மகாணசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளார்கள், இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வேலைப்பழு குறைவு ஆனால் அக்காலப்பகுதியில் அரசியல் தீர்வுத் திட்டத்தை நோக்கிச் செயற்படுவது தாமதாமாக இருந்தது. தற்போது அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியல் தீர்வுத்திட்டத்தை நோக்கி செயற்பட வேண்டிய காலகட்டத்தில் உள்ளது. அது சம்மந்தமாக ஆளமாகச் சிந்திக்கின்ற சூழலும் தற்போது காணப்படுகின்றது.
கேள்வி : - தமிழ் மக்களின் அடிப்படிப் பிரச்சனைகளுக்காக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் பல பிரையத்தனங்களை மேற்கொண்டிருந்த போதும், இதுவரையில் காணிப்பிரச்சனை, நில ஆக்கிரமிப்புகள், கோன்ற பல விடையங்களுக்குத் தீர்வு கிடைக்காமலுள்ளதே! இதுபற்றிக் கூறுங்கள்.
விடை : - கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஜனவரி 08 வரைக்கும், இந்த நாட்டிலே நடைபெற்ற ஆட்சி பற்றி மக்கள் நன்கு அறிவார்கள், அக்காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. அக்காணிகள் விடுவிக்கப்படாமல் தமிழ் மக்கள் அடிமைத்தனத்தின் கீழ் வாழ்ந்து வந்தார்கள்.
பின்னர் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி காணிகள், விடுவிக்கப்படும், அரசியல் தீர்வு கிடைக்கும் போன்ற பல எதிர் பார்ப்புக்களின் மத்திக்கத்தில் அந்த காட்டாட்சியை தமிழ் மக்கள் மாற்றி புதிய அரசை நிருணயித்திருந்தார்கள்.
இருந்த போதிலும் தமிழ் மக்கள் எதிர் பார்த்த வியடைங்கள் இன்று வரை இந்த பதிய அரசினால் மேற்கொள்ளப்பட வில்லை. காணி விடுவிப்பு எனத் தெரிவித்து வடக்கிலே ஒரு சில நூறு ஏக்கர்களும். கிழக்கிலே ஒரு சில நூறு ஏக்கர்கள் மர்திரமே விடுவிக்கப் பட்டுள்ளது. ஏனைய காணிகள் விடுவிக்கப் படவில்லை.
வடகிழக்கிலே உள்ள ஆயுதப் படைகளைக் குறைக்க வேண்டும். இராணுவ முகாம்கள் சுருக்கப்பட வேண்டும். என எதிர் பார்திருக்கும் எமது தமிழ் மக்கள் இவ்விடையங்களில் இதுவரை எட்டாக்கனியாகவே உள்ளார்கள்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பாலமுனையில் 21 வீடுகளை உள்ளடக்கி பொலிஸ் நிலையம் அமைத்துள்ளார்கள், அதுபோல் முறக்கட்டாஞ் சேனையில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்குள் தனியார்களது காணிகள் உள்ளடக்கப் பட்டுள்ளன, இவ்வாறாக பல இடங்கில் தமிழ் மக்களின் காணிகள், வீடுகள், என்பன இன்னும் விடுவிக்கப் படாமலிருக்கின்றன.
இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளையும், வீடுகளையும். நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும், இந்த அரசு விடுவித்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கேள்வி : - மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலிருந்த கிழக்கு மாகாணசபையின் அதிகார ஆட்சிக்கும், தந்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் பின்னரான கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும், வேறுபாடுகள் உண்டா?
விடை : - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாண அளுனராக இருந்தவர் ஒர் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியாகும், அவர் கிழக்கு மாகாணத்தை அவரது கைக்குள் வைத்திருந்து இறுக்கமான முறையில் வழிநடாத்தினார். மகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதையும். அங்கீகரிக்காமலும், செயற்பட்டார்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலன ஆட்சிக் காலத்தில் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மாகாண ஆளுனர் ஒரு சிவில் உத்தியோகஸ்தராக இருந்தவர். இவர் முதலிருந்த ஆளுனர் போலல்லாமல், மாகாணசபை நிவாகத்திற்கும். முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்க்கின்றவராகக் காணப் படுகின்றார். இந்நிலையில் கடந்த கால ஆட்சிக்கும். தற்போதுள்ள ஆட்சிக்கும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன இருப்பினும், அடுத்து வரும் காலங்களில் தற்போதுள்ள ஆளுனரின் செய்ற்பாடுகள் தொடர்பில் மேலும், தெரியவரும்.
கேள்வி : - நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாட்ட தமிழ் மக்கள் அனைவரும், ஒருமித்து வாக்களித்திருந்தால் மேலும், ஓரிரு நாடாளுமன்ற அங்கத்துவத்தைப் பெற்றிருக்கலாம் அல்லவா? ஏன் மட்டு மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் விழிப்பணர்வு தேவையாகவுள்ளதா?
விடை : - மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் அனைவரும் நினைத்திருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கூடுதலான வாக்குகளை வழங்கியிருக்கலாம். இம்மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப 4 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கலாம் என்பது உண்மைதான்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடியும்வரை இம்மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப் படுவார்கள் என்ற எதிர் பார்ப்பு இருந்தது. அது 3 ஆனசங்களுக்குள் மட்டப் படுத்தப் பட்டிருந்தது.
இந்நிலமை இம்மாவட்ட தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு காணாது என்பதற்கு மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே 4 கட்சிகள், போட்டியிட்டன, அந்த 4 கட்சிக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த 4 கட்சிகளில் ஒரு கட்சி மாத்திரம் தனித்து தாங்கள்தான் பெரிய அண்ணன் என செயற்பட்டு அவர்களது கட்சி சார்ந்த வேட்பார்களுக்கு மாத்திரம்தான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களை வேண்டிக் கொண்டனர். இது மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைத்த மக்கள் அக்கூட்டமைகப்புக்குள்ளேயே ஒற்றுமையில்லை ஏன் இவர்களுக்கு வர்க்களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல மக்கள் வாக்களிக்காமல் விட்டுள்ளார்கள். எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப் படாததிற்கு மக்களிடத்தில் விழிப்புணர்ச்சி இன்மை என்பதைவிடவும், இக்கூட்டமைப்பே காரணமாகும்.
கேள்வி : அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இளம் சமுதாயத்தினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கழமிறங்க தற்போதிருந்தே ஆர்வம் காட்சி வருவதை அவதானிக்க முடிகின்றதே… இதுபற்றிக் கூறுங்கள்
விடை : - நிட்சயமாக இளம் சமுதாயத்தினரை இத்தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்பது எனது அவா ஏனெனில் இளம் இரத்தம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குப் பாய்ச்சப்பட வேண்டும். இளம் சமுதாயத்தினர் வளர்ந்து தேசிய அரசியலில் பங்கெடுக்க வேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வருங்கால இளைஞர்கள் கைப்பற்ற வேண்டும்.
தமிழ் இளைஞர் யுவதிகளின் கனவுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இவற்றுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியினை உருவாக்க விருக்கின்றேன், இதுதொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமை;பபின் தலைமையுடனும், எனது கட்சித் தலைமையுடனும் மிகவிரைவில் கதைப்பதற்கு இருக்கின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி உருவாக்கப்படுவது சிலருக்குப் பிடிக்காது என்பதுவும் எனக்குத் தெரியும், ஏனெனில் இளைஞர்கள், முன்வந்தால் எதையும், சாதித்து விடுவார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி செயற்பட்டால் தற்போதிருக்கின்றவர்களின் பதவிக்கு ஆப்பு வைத்து விடுவார்கள், என நினைக்கின்றவர்களும், தற்போது எள்ளார்கள் அந்த நினைப்பு இருக்கக் கூடாது.
இளைஞர்களை முன்னேற்ற வேண்டும், குறைந்தது 50 வீதமாவது நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட வைக்க வேண்டும், குறிப்பாக இளம் தலைமையை நாம் உருவாக்க வேண்டும்.
கேள்வி : தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்களின் அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்.
விடை : - தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், ஏன் பெரும்பான்மையான சிங்கள மக்களும், மற்றும். ஜே.வி.பி, சரத் பொன்சேகா, உட்பட அனைவரும், தமிழ அரசியல் கைத்திகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள், அந்த அரசியல் கைத்திகளை வைத்து தெற்கிலே அரசியல் செய்வதற்கு, முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்சவும், அவருடன் சேர்ந்த சிலரும் கூச்சலிருகின்றார்கள்.
தமிழ் அரசியல் கைத்திகளை, விடுதலை செய்தால் ஈழம் கிடைத்துவிடும், ஈழம் மீண்டும் போருக்கு, அடித்தளமாக அமைந்துவிடும், என அவர்கள், கூச்சலிடுகின்றார்கள், இதைப்பார்து தமிழ் மக்களின் அனுசரணையில் ஆட்சியமைத்துள்ள தந்போதைய ஜனாதிபதியும், அரசாங்கமும், ஏன் அந்தக்கூச்சலுக்குப் பயப்படுகின்றார்கள் என்று எமக்குப் புரியவில்லை.
கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச, துணிச்சலாகச் செயற்பட்டிருந்தார். அவர் ஜனாதிபதிhக இருக்கும்போது இலங்கை அரசிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமாகும்.
இலங்கையில் இனப்பிரச்சனை வருவதற்குக் முக்கிய காரணமாக இருந்தது 1956 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சிறி என்ற சிங்கள எழுத்தும் கொண்டுவரப் பட்டதாகும்.
அதனால் ஏற்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தில், தமிழ் மக்கள் சிறி எதிர்ப்புப் போராட்டத்தில் வடகிழக்கிலும், தென்னிலங்கையிலும், நடாத்தினர். அப்போது ஏற்பட்ட எதிர்ப்பின் காரணத்தினால் பல இன்னர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு இணைங்க ஒரே இரவில் அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச, துணிச்சலாகச் செயற்பட்டு சிறி என்ற எழுத்தை இல்லாமல் செய்திருந்தார்.
இவ்வாறான துணிச்சல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், வரவேண்டும், சிறுபான்மை இனங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஜனாதிபதி சிறுபான்மை மக்களின் இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வருவார் என்ற இக்கால கட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினதும், அவரேடு இணைந்தவர்களினதும் கூச்சலுக்குப் பயப்படக்கூடாது. நாம் எதிர்பார்திருக்கின்ற இந்நேரத்தில் ஆகக்குறைந்தது, அரசியல் கைத்திகளை விடுதலை செய்யாமலுள்ளார் ஏன் என எமக்குச் சந்தேகம் எழுகின்றது.
217 தமிழ் அரசியல் கைத்திகளை விடுவிப்பதற்கு யோசிக்கும் இந்த நாட்டு ஜனாதிபதியும், அரசாங்கமும், புரையோடிப்போயுள்ள எமது இனப்பிரச்சனைக்குரிய தீர்வை எவ்வாறு நிரந்தரத் தீரவைப் தருவார்கள், பிரிந்திருக்கின்ற வடக்கு கிழக்கை எப்படி இணைத்து எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை, பூர்தி செய்யக் கூடிய ஓர் தீர்வைத் தருவார்கள் என்ற கேள்விக்கு தமிழ் மக்கள் விடைதேட வேண்டியுள்ளது.
கேள்வி : - தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் உள்ள சிக்கல் நிலமைகள் என்ன?
விடை : - கடந்த 1986 ஆம் ஆண்டு தொடக்கம் 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் வரையில் இந்த நாட்டிலே ஆயுதம் ஏந்திய முன்னாள் போராளி இயக்கங்களுக்கிடையே நடந்த கசப்பான சம்பவங்கள், அனைத்தையும், நாம் அனைவரும், அறிவோம்.
பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று ஒரு அணி உருவாக வேண்டும், அவ்வணி தமிழ் மக்களுக்காகவும், அரசியல் ரீதியாகவும். ஆகிம்சை ரீதியாகவும், போராடும். இதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும், என்ற காரணத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் அனுசரணையுடன், கிழக்கு மாகாண பத்திரிகையாளர்களின் அக்கறையுடனும், அவர்களது, கடின முயற்சியுடனும், தமிழீழ விடுதலை இயக்கம், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, இவைகளை ஒன்றிணைத்து உருவாக்கப் பட்டதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும்.
இக்கூட்டமைப்பு இன்றுவரை பதிவு செய்யப்படாமல், மக்கள் மயப்படுத்தப்படாமல், ஒரு கட்டமைப்பு இல்லாமல், இயங்குi எவருமே விரும்பவில்லை, இக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு ஒரு கட்டமைப்பு வேண்டும், இக்கூட்டமைபினூடாக ஒற்றுமையுடன் தமிழ் மக்களை வழிநடாத்தி, நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டும்.
ஆனால் நீங்கள் பெரிது, நாங்கள் பெரிது என நினைக்கும் சில சக்திகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யக் கூடாது, பதிவு செய்தால் கூட எங்களுக்குக் கீழ்தான் மற்றவர்கள் இருக்க வேண்டும், என நினைப்பது மிகவும் அபத்தமானது அது தமிழ் மக்களின் எதிர் காலத்தைக் கேளிவிக்குறியாக்கும்.
முன்னாள் போராளிகள் 1987 ஆம் அண்டு காலப் பகுதியில் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்ட காலமிருந்து, இன்றுவரை போராளிகளாக இருந்தவர்கள் பலர் அரசியல் கழத்தில் இருக்கின்றார்கள். அனுபவமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுக்கு முன்னர் இருந்து அரசியலில் இருப்பவர்கள் நாங்கள்தான் பெரியவர்கள் எனச் செயற்படுகின்றார்கள். ஆனால் அனைவரும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகப் பாடுபடுகின்றார்கள்.
எனவே மிகவிரைவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்க ஒரு இலட்சனையைத் தெரிவு செய்து அதனை ஓர் அரசியற் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் மக்களினதும் எனதும் அவாவாகும். எனத் தெரித்தார்.
0 Comments:
Post a Comment