17 May 2026

சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்திற்கான புதிய வகுப்பறைக் கட்டடத் திறப் விழாவும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

SHARE

சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்திற்கான புதிய வகுப்பறைக் கட்டடத் திறப் விழாவும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

பட்டிருப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்திற்கான புதிய வகுப்பறை கட்டிடத் தொகுதி திறப்பு விழாவும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் சனிக்கிழமை(16.05.2026) பாடசாலை அதிபர் த.திருவருட்செல்வன் நடைபெற்றது. 

பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு வேண்டிய பௌதிக வளங்களை வழங்கும் முகமாக இப்பாடசாலையில் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி இப்பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ஊடகவியலாளர் திருமதி.வரதராஜன் வேணுகா அவர்களின்   முயற்சியினால் சுவிடன் நாட்டில் வசிக்கும் முன்னாள் மண்டூர் ஓட்டு தொழிற்சாலை முகாமையாளர் வடிவேல் சந்திரகுமாரின. நிதி அனுசரணையின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டடது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலைய கல்வி அலுவலகத்தின் கோட்டை கல்வி அதிகாரி எஸ்.ஜமுனாகரன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிட தொகுதியை திறந்து வைத்தார்.

இந்நிiலியல் அப்பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடசாலை சீருடை மற்றும் கற்றல் உபகரணங்களையும் சுவீடன் நாட்டில் வசிக்கும் யாழ்ப்பாணம் கோப்பையைச் சேர்ந்த ராஜதுரை குலேந்திரராஜாவின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு  அவரது நிதி அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு, இந்நிகழ்வில் மேலும் வலைய கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள், சந்திரகுமாhரின் குடும்ப அங்கத்தவர்கள், முன்னாள் பொது சுகாதார உத்தியோகஸ்தர் எஸ்.எம்  முனாஃபர் மற்றும்,ஆசிரியர்கள் அக்கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





















SHARE

Author: verified_user

0 Comments: