17 May 2026

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22 நாடுகள் சேர்ந்து மௌனிக்கச் செய்திருந்தனர் - தவிசாளர் மேனன்.

SHARE

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22 நாடுகள் சேர்ந்து  மௌனிக்கச் செய்திருந்தனர் -  தவிசாளர் மேனன்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22 நாடுகள் சேர்ந்து எமது மௌனிக்கச் செய்திருந்தன. மீண்டும் நாம் அகிம்சை ரீதியான போராட்டத்திலேயே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். நாட்டிலே சம அந்தஸ்துடன் வாழ்வதற்காக இவ்வாறான போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். 

என மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்துள்ளார். ;ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(17.05.2026) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் நடைபெற்றது. 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில். 

எமது உரிமைக்காகவும் தமிழ் மக்களின் இருப்புக்காகவும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் முகமாக அந்த மக்கள் இறுதி யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் உப்பில்லா கஞ்சியை அருந்தி இறந்தவர்கள்போக ஏனையர்வர்கள் அவர்களது உயிர்களை காப்பாற்றி இருந்தார்கள். அவ்வாறான மக்களை நாங்கள் வருடம் தோறும் அந்த மக்கள் எவ்வாறு வேதனைகளை அனுபவித்தார்களோ எவ்வாறு கஞ்சி அருந்தி அவர்களது உயிர்களை காப்பாற்றினார்களோ, அந்த நினைவு நாளை வருடம் தோறும் நாம் மக்களுக்கும்ம், எமது இளம் சமுதாயத்தினருக்கும் எடுத்தியம்பி கஞ்சிக வழங்கி நினைவுகூர்ந்து வருகின்றோம். 

2009 மே 18 திகதி முள்ளிவாய்க்காலில் பேரவலத்தின் மத்தியில் இலட்சக்கணக்கான மக்கள் உயிர்களை இழந்து இருந்தனர். இந்த நிலையிலே வடகிழக்கிலே தமிழர்களாகிய நாங்கள் இலங்கையிலே ஒரு சிறுபான்மை இனமாக இருந்தாலும் எங்களுக்கும் இலங்கையிலே சமமான உரிமைகளும், சமமாக மதிக்கப்படுகின்ற தன்மையும், ஏனைய சமூகத்தின் மத்தியில் சமமாக நாங்களும் இந்த நாட்டிலே வாழுகின்ற பிரஜைகள் என்ற அடிப்படையில்தான் 2009இல் எமது மக்கள் இன்னுயிர்களை தியாகம் செய்திருந்தனர். உரிமைக்காக போராடி இருந்தார்கள். 

ஆரம்பத்தில் அஹிம்மை ரீதியாக எமது உரிமைக்காக இலங்கை தமிழரசி கட்சி போராடி இருந்தது. அதற்காகத் தமிழ் மக்களுக்கு எதுவித தீர்வுகளும் கிடைக்கப்பெறாத நிலையில் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடிய இனம் தமிழினம். 

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22 நாடுகள் சேர்ந்து எமது மௌனிக்கச் செய்திருந்தன. மீண்டும் நாம் அகிம்சை ரீதியான போராட்டத்திலேயே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். நாட்டிலே சம அந்தஸ்துடன் வாழ்வதற்காக இவ்வாறான போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். 

வடக்கு கிழக்கிலே நில அக்கிரமிப்பு, தொல்பொருள் என பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்களில் நிலங்களும், மத ஸ்தலங்களும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. முள்ளிவாய்க்காலிலே இவ்வாறானவற்றுக்கு எதிராகத்தான் எமது மக்கள் போராடி  முள்ளிவாய்க்காலிலும் மரணித்திருக்கின்றார்கள். அவர்கள் மரணித்து 17 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அந்த மக்களின் உயிர் தியாகங்களை நாம் என்றும் மறக்க முடியாது.வருங்கால இளைஞர்களுக்கும் இந்த விடயங்களை எத்தி வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. 

எனவே தொடர்ந்தும் உரிமைக்காக இலங்கை தமிழரசு கட்சி குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறான நிகழ்வுகளை எமது அடுத்த தலைமுறைக்கும் ஏத்தி வைக்கும் பணியினையும் நாங்கள் செய்ய செய்து கொண்டிருக்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார். 

இதன்போது முன்னிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்ட அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்திலேயே கஞ்சி காய்ச்சி மக்ளுக்கு வினியோகிக்கப்பட்டன. இதன்போது மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப் பற்ற ஆகிய பிரதேச சபைகளின் உப தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

































SHARE

Author: verified_user

0 Comments: