அதிக உஷனம் வரட்சியால் வற்றியுள்ள குளங்கள்
நீர்தாங்கிகள் மூலம் தினமும் 25000 லீற்றர்
குடிநீர் வழங்க ஏற்பாடு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக உஷ்னமான காலநில நிலவி வருகின்றது. இதனால் கிராமியக் குளங்கள் வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பெரியகுளம், கோவில்போரதீவுக்குளம், பொறுகாமம் குளம், வெல்லாவெளிக்குளம், உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமைந்துள்ள கிராமியக் குளங்கள் முற்றாக வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் கால்நடைகளும், நீர் தேடிச் செல்வதோடு, வற்றிய குளங்களில் அப்பகுதி மக்கள் மீன் பிடிப்பதையும், பறவைகள் இரைதேடி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இது இவ்வாறு இருக்க கிராமங்களிலுள்ள கிணறுகளில் நீர் வற்றியுள்ளதனால் தாம் மக்களுக்கு நீர்தாங்கிகள் மூலம் இன்றிலிருந்து நாளாந்தம் சுமார் 250000 லீற்றர் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளதாக போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தெரிவித்தார்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment