குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை
வலுப்படுத்தும் செயற்றிட்டம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுப்படுத்தும் நோக்குடன் ஏழு குடும்பங்களுக்கு உதவி வழங்கி திங்கட்கிழமை(07.09.2026) வைக்கப்பட்டது.
சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் க.தங்கத்துரை இதன்போது தெரிவித்தார்.
இதன் போது ஏழு குடும்பங்களுக்கும் தலா 75000 ரூபா பெறுமதியான கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட நான்கு மாத கோழிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தியின் திட்டமிடலில் நடை பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment