மட்.ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரிக்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா.
கல்வி அமைச்சினால் கற்றல் செயல்பாடுகளை வினைத்திறனுடையதாக முன்னெடுக்கும் வகையில் தொடர்ச்சியாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கு உட்பட்ட ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் கனிஷ்ட்ட பிரிவு மாணவர்களுக்கு 2 மில்லியன் ரூபா செலவில் புதிய கற்பித்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கல்லூரியின் அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை(14.08.2026) காலை விசேட இறைவழிபாடுகளின் பின்பு பின்பு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி நீலமாதவானந்தாஜி, மட்டக்களப்பு வலைய கல்விப் பணிப்பாளர் எஸ்.ரவி, மற்றும் மாநகர சபை உறுப்பினர் ஆ.துதிஷ்கரன், லவயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், ஆசியரியர்கள், மாணவர்கள், கல்விச் சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டு அடிக்கலினை நாட்டி வைத்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment