மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி நகரில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததால் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுநரான காத்தான்குடி 5ஐச் சேர்;ந்த முஹம்மத் சபீர் (வயது 25) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்காகி பாரதூரமான காயங்களுடன் உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவத்தையடுத்து சந்தேக நபர் ஒருவர் உடனடியாக காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தனது கணவன் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு விரையப்பட்டதை அறிந்த அவரது மனைவி அதிர்ச்சியில் மயங்கி விழுந்து நினைவிழந்த நிலையில் அவரும் உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம்பற்றி காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
1 Comments:
What a stuff of un-ambiguity and preserveness of valuable familiarity concerning unpredicted feelings. capital one credit card login
Post a Comment