குருக்கள்மடம் மனிதப் புதைகுழி பகுதியில்
14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரைக்கும் மண் படிம மாதிரி பரிசோதனைக்குட்படுத்துமாறு
நீதிமன்றம் உத்தரவு.
குறித்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவிக்கையில்…
கடந்த 24.08.2026 அன்று நீதிமன்றத்திலே ஆஜராகி இருந்த காணாமல் ஆக்கப்பட்;டோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர், மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆகியோர் இந்த அகழ்வு நடவடிக்கைகளில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை நடத்துவதற்கு ஆட்சேபனைகள் இல்லை என்பதை தெரிவித்ததற்கு இணங்க குறித்த வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரைக்கும் ஒரு வார காலங்களுக்கு மண் படிம மாதிரி பரிசோதனைகளை குறித்த அந்த சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி அமையப்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்ற பிரதேசத்தில் மேற்கொள்வதற்கென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கிடையில் குறித்த அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு பொருத்தமான கட்டளைகளை ஆக்குவதற்கென வழக்கு செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டிருந்தது. அதில் அறிவித்தல் அனுப்பப்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மன்றிற்கு பிரசன்னமாகி குறித்த அந்த சந்தேகத்திற்கு இடமான மனிதப் புதைகுழி அமையப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்ற பிரதேசத்திலே மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு மண்;முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் மேற்கொள்ளவதற்கு முடியுமான சகல ஒத்துழைப்புகளையும் நல்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தவிசாளர் இதன்போது மன்றிற்குத் தெரிவித்தார்.
நிலையில் எதிர்வருகின்ற 14 திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் இந்த மண் படிம மாதிரி பரிசோதனைகளை குறித்த அந்த பிரதேசத்தில் நடத்துவதற்கான கட்டளைகளை மன்று ஆக்கி இருக்கின்றது. மீண்டும் இந்த வழக்கு 14.09.2026 அன்று மேலதிக நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட இருக்கின்றது.
என குறித்த வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளரான
ரவூப் அப்துல் மஜீத் சார்பாக ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் இதன்போது தெரிவித்தார்.
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment