4 Feb 2026

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு.

SHARE

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டம்  மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் கி.இளம்குமுதன் தலைமையில்  நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இதன்போது உதவி பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீர்த்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செய்யப்பட்டது. 

தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கு சுதந்திர தினம் பற்றியும் பொருளாதாரத்தால் வீழ்ச்சி அடைந்த நாட்டை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பாதையில் பங்குதாரர்களாக விளங்கவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் உதவி பிரதேச செயலாளரினால் உரை நிகழ்த்தப்பட்டது. 

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், கணக்காளர் ஏ.மோகனகுமார்;, நிருவாக உத்தியோகத்தர் ஏ.தவேந்திரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது பிரதேச செயலக வளாகத்தில்  பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு மர நடுகையும் இடம்பெற்றது.











SHARE

Author: verified_user

0 Comments: