அரங்கநாத பெருமாள் ஆலய வரலாறு நூல் வெளியீட்டு விழா.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்கலம் அருகே அமைந்துள்ளது திருபுவனம் கிராமத்தின், விக்ரம சோழ விண்ணகரம் என்ற பெயர் பெற்ற இந்த கிராமம் நாளடைவில் பெயர் மருவி திருபுவனம் என அழைக்கப்படுகிறது.
இந்த கிராமத்தில் ராஜராஜசோழன் ஆட்சி காலத்திற்கு முன்பாக கட்டப்பட்ட மிக பழமையான ஆழ்வார்களால் பாடல் பெற்ற அரங்க நாச்சியார் உடனுறை அரங்கநாத பெருமாள் சயன திருக்கோல மூர்த்தி ஆலயமாகும்.
வரலாறு பற்றி திருப்பணி கமிட்டி தலைவர்.
டி.என்.இராசப்பா எழுதிய அரங்க நாத பெருமாள் ஆலய நூல் வெளியீட்டு விழா தலைமை இளவரசர் சிவாஜிராஜா து.போஸலே முன்னிலை எல்.எஸ்.மாதவன் மாநில அணி துணை தலைவர் தமிழர் தேசம் கட்சி, அரசு வழக்கறிஞர் வீ.சுதா நூலை சம்மார பிடாதிபதி வசி சிவ சித்தம் வெளியிட்டார், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் துரை. கோவிந்தராஜ், வக்கில் கிஸ்ணசாமி, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியனன் பெற்று கொண்டனர், வரவேற்புரை ஜோதி இராமலிங்கம் நன்றியுரை திருஞானம் சம்மந்தம் நிகழ்த்தினார்.
சிவசேனா மாநில செயல் தலைவர் க. சசிகுமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழாவில் இதன்போது வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் வசந்த் மற்றும் நிர்வாகிகள், ஓய்வு பெற்ற தனியார் மற்றும் அரசு துறை நிர்வாகிகள், ஆன்மீக அன்பர்கள், ஓய்வு பெற்ற இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்,
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment