4 Feb 2026

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.

SHARE

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் சிகிச்சை நிலையம் சுதாதார அமைச்சின் பிரத்திப் பணிப்பாளர் நாயகம் எஸ்.மகேந்திர ஆலோட் அவர்கள் இன்று புதன்கிழமை(04.02.2026) திறந்து வைத்தார். 

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தோல் சிகிச்சை வைத்திய நிபுணர் ரி.தமிழ்வண்ணன், தொழுநோய் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் லிபோஜிதா மற்றும் ஏனைய பொறுப்பு வைத்தியர்கள், தாதியர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

எதிர்வரும் காலங்களில் நோயாளர் நலன் கருதி வாழைச்சேனை பிரதேசத்திலும் இவ்வாறான சிகிச்சை நிலையம் ஒன்று ஆரம்பிக்கபடவுள்ளன. 

இது ஒரு தொற்று நோயாகும். நீண்ட காலம் மாவட்டத்திலிருந்து வருகின்றது. இதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரப்படுகின்றன. நோயாளர்களின் நலன் கருதி ஆரையம்பதியிலும் இதற்குரிய சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை வழங்கினால் கட்டுப்படுத்த முடியும். இல்லாது விட்டால் அது நரம்புகளையும், தோலையும் பாதிக்கும். நோய் அறிகுறியை அவதானித்தவுடன் சிகிச்சை பெற்றால் குணமாக்க முடியும் என இதன்போது வைத்தியர்கள் தெரிவித்தனர்.

























SHARE

Author: verified_user

0 Comments: