குருக்கள்மடம் ஏத்தாழைக்குளம் பறவைகள்
சரணாலயத்தில் நடைபெற்ற உலக உலக சதுப்பு நில தினம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாழைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ஈரநிலங்கள் மற்றும் பாராம்பரிய அறிவு கலாசார பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் இன்று (02.02.2026) குருக்கள்மடம் ஏத்தாழைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டதுடன், மேலும் மண்முனை தென்
எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச
செயலாளர் உ.உதயசிறிதர், கிழக்கு ப் பல்கலைக் கழக பேராசிரியர் எஸ்.சிவரெட்ணம், மற்றும்
பாடசாலை மாணவர்கள், சுற்றாடல் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, சுற்றாடல் கீதம் பாடப்பட்டதுடன், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடப்பட்ட ஏத்தாழைக்குளம் பறவைகள் சரணாலயம் எனும் பெயர் பலகையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.










0 Comments:
Post a Comment