ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வீதி அபிவிருத்திப்
பணிகள் முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட வீதி அபிவிருத்திகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடந்த 2016 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை அவ்வீதிகள் புனரமைப்புச் செய்யப்படாமலுள்ளன. அவ்வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அந்தவகையில் மண்முனை தென் எருவில் பற்று
பிரதேசத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் புனரமைப்புச் செய்யப்படவுள்ள வீதிகளைப்
பார்வையிட்டு, திட்ட வரைபுகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் திங்கட்கிழமை(26.01.2026)
களவிஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர், கிராம மட்ட பொது அமைப்புக்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கந்து கொண்டிருந்தனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மண்முனை
தென் எருவில் பற்று பிரதேச சபைக்குபட்பட்ட, களுதாவளை, செட்டிபாளையம், களுவாஞ்சிகுடி,
குருக்கள்மடம், உள்ளிட்ட பல கிராமங்களில் இவ்வாறு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment