23 Jan 2026

உணவுகளைக் கையாள்தல் தொடர்பில் விழிப்புணர்வு.

SHARE

உணவுகளைக் கையாள்தல் தொடர்பில் விழிப்புணர்வு.

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தை பகுதியில் உணவுகளைக் கையாள்தல் தொடர்பில் அப்பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாழக்கிழமை(22.01.2026) நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டடில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பொது சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர்கள், களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத்தினர், வர்;த்தகர்கள், என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பொருட்களின் தரம், உணவுப் பாதுகாப்பு, உணவுகைளைப் பேணி பாதுகாப்பாக வைத்தல், பொருட்களின் தர நிருணயம், போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது பொது சுகாதார பரிசோதகர்களால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.















SHARE

Author: verified_user

0 Comments: