கடந்த இரு வாரமாக வழிமாறி பயந்து திரியும்
காட்டுயானைகளை வெளியேற்றும் நடவடிக்கை பலனளிக்கவிலலை.
நகர்ப்பகுதிகளிலும் அதிகரித்துள்ள காட்டுயானைகள் கூட்டம், தீர்வின்றி அச்சத்துடன் மக்கள்.
கடந்த 11 ஆம் திகதி மட்டக்களப்பு வாவியை நீர்வழியாகவே நீதிக் கடந்து புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் திசை மாறி தினம் தினம் ஊர் ஊராக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிகிறது.
வுpயாழக்கிழமை(25.09.2025) இரவு வரையிலும், அந்த காட்டு யானைகள் தேற்றாத்தீவு பகுதியை கடந்து களுதாவளை, களுவாஞ்சிக்குடி, ஆற்றங்கரை ஓரங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த காட்டு யானைகள் துரத்தும் பணியில் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசி திணைக்களத்தினர் வியாழக்கிழமை இரவு வேளை வரைக்கும் முயற்சித்த போதும் அது பலனளித்திருக்கவில்லை. தொடர்ந்தும் வெள்ளிக்கிழமை(26.09.225) வரையிலும் அந்த காட்டுயானைக்கூட்டம் அப்பகுதியிலேயேதான் தங்கி நிற்பதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதில் அழகிய கொம்பன் யானை ஒன்று உள்ளடங்கலாக மொத்தமாக 04 யானைகள் கூட்டம் கூட்டமாக திரிவதையும் அவதானிக்க முடிகிறது.
இக்காட்டு யானைகள் கூட்டம் தொடர்ச்சியாக
பல்வேறு பயன் தரும் மரங்களையும், விவசாய நிலங்களையும் துவம்சம் செய்து வருவதானது தமக்கு
வேதனையளிப்பதாகவும் தமது பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் கவலை
வெளியிடுகின்றனர்.


0 Comments:
Post a Comment