போரதீவுப்பற்று பிரதேசத்தில் நாளென்றுக்கு
22000 லீற்றர் குடிநீர் வவுசர்கள் மூலம் வியோகம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்தில் நாளென்றுக்கு 22000 லீற்றர் குடிநீர் வவுசர்கள் மூலம் வினியோகிக்கப்பட்டு வரப்படுகின்றன.
அதற்கும்மேலாக இக்காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் இடம்பெறுகின்ற மரண வீடுகள், மற்றும் பொது நிகழ்வுகளுக்கும், நாம் வுவுசர் மூலம் குடிநீரை வழங்கி வருகின்றோம். எனது பிரதேச சபை மிகவும் வருமானம் குறைந்த சபையாக இருக்கின்ற போதிலும் நாம் மாதாந்தம் இரண்டு இலட்சத்து 32,000 மேற்பட்ட நிதியை மாதாந்தம் செலவு செய்து வருகின்றோம்.
என போரதீவுப் பற்றுப் பிரதே சபையின் தவிசாளர் விமநலாதன் மதிமேனன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் வியாழக்கிழமை(25.09.205) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்ககையில்… மட்டக்களப்பு மாவட்டம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலமை காரணமாக எமது பிரதேச சபையினால் நீர்தாங்கிகள் மூலம் குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பல கிராமங்களில் சுத்தமான குடிநீரின்றி அங்குள்ள மக்கள் அவஸ்தை பட்டு வருகின்றனர். இந்த நிலையில் எங்களுடைய போரதீவுப் பற்று பிரதேச சபையினால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒத்துழைப்புடன் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க 9 கிராமங்களுக்கு நாம் வவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றோம்.
வருடாந்தம் ஏற்படும் வறட்சி நிலைமையை கருத்தில் கொண்டு எமது சபையினால் இவ்வாறு நாம் வவுசர்கள் மூலம் குடிநீரை வருடாந்தம் வழங்கி வருகின்றோம். அதுபோன்று இவருடமும் இந்த சேவையை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
எனது பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களில் பல சிறு குளங்கள் துர்ந்துபோய் கிடக்கின்றன அவ்வாறு காணப்படுகின்ற குளங்களை தூர்வாறல் செய்கின்றபோது மாரிகாலங்களில் கிடைக்கின்ற மழை நீரை சேமித்து அருகில் உள்ள கிணறுகளில் அவை ஊற்றெடுக்கும் பட்சத்தில் இவ்வாறான வரட்சி காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிவர்த்தி செய்வதற்கு அது ஏதுவாக அமையும். எனவே எமது பிரதேசத்தில் காணப்படும் கிராமிய குளங்களை தூர்வாரல் செய்து புனரமைப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
அதுபோல் இவ்வாறு கிராமிய குளங்கள் புனரமைப்பு செய்யப்படும் போது மேலதிகமாக பயிர் செய்கைகளையும், வேளாண்மை செய்கையையும், மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் இதனால் எமது பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என நாம் எதிர்பார்க்கின்றேன். இதுதொடர்பான பல திட்ட முன்மொழிவுகளையும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு நாம் அனுப்பி வைத்திருக்கின்றோம்.
இவ்வாறு நாம் குடிநீர் வழங்கி வரும் கிராமங்களுக்கு நிரந்தரமான சுத்தமான குடிநீரை வழங்குவதற்குரிய 50 மில்லியன் ரூபாய்க்குரிய திட்ட முன்மொழிவுகளை நாம் முன்மொழிந்திருக்கின்றோம். மக்களின் நீர் தேவைனை முற்றாக நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து இருக்கின்றோம்.
எனினும் நாம் தற்போது நாள் ஒன்றுக்கு 22,000 லீற்றர் குடிநீரை நாம் வவுசர்கள் மூலம் பிரதேசத்திற்கு வழங்கி வருகின்றோம். அதுபோன்று பிரதேசத்தில் இடம்பெறுகின்ற மரண வீடுகள், மற்றும் பொது நிகழ்வுகளுக்கும், நாம் வவுசர் மூலம் நீரை வருகின்றோம். எமது பிரதேச சபை மிகவும் வருமானம் குறைந்த சபையாக இருக்கின்ற போதிலும் நாம் மாதாந்தம் இரண்டு .லட்சத்து 32,000 மேற்பட்ட நிதியை நாம் செலவு செய்து வருகின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்
பற்ற பிரதேசத்தில் தற்போது அதிக வரட்சி நிலமை காணப்பட்டு வருகின்றனது. இதனால் அப்பகுதியிலுள்ள
குளங்கள் முற்றாக வற்றியுள்ளதுடன், மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றன.
எனினும் குழாய் மூலமான குடிநீர் அமைந்துள்ள கிராமங்களில் சீரான முறையில் தமக்கு நீர்
கிடைப்பதில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.









0 Comments:
Post a Comment