தமிழர் கலை கலாசாங்களுடன் நடந்தேறிய களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை(05.03.2025) வித்தியாலய அதிபர்; க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் கலந்து கொண்டிருடிந்தார் இதன்போது நாவலர், விபுலானந்தர், பாரதி, என மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் திறனாய்வு போட்டிகள் இடம்பெற்றன.
இதன்போது முதலாவது இடத்தை 527 புள்ளிகளைப் பெற்று விபுலானந்தர் இல்லமும், இரண்டாவது இடத்தை 525 புள்ளிகளைப் பெற்று பாரதி இல்லமும், மூன்றாவது இடத்தை 485 புள்ளிகளைப் பெற்று நாவலர் இல்லமும் பெற்றுக் கொண்டன.
ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, மாணவர்களின் அணிநடை, சுவட்டு அஞ்சல் ஓட்டம், என்பன இடம்பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது தமிழர் கலை கலாசார முறைப்படி இதன்போது ஆற்றுகை செய்யப்பட்ட மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இதன்போது மேலும் களுபோவில போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி நாகபூசணி கிருஸ்ணபிள்ளை, கிழக்குப் பல்கலைக் கழகசமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், மு.விக்னேஸ்வரன், பட்டிருப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், இணைப்பாளர், பி.திவிதரன் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment