6 Mar 2025

மண்முனை தென் மேற்கு பிரதேசத்திற்கான சிறு போக நெற்செய்கை ஆரம்பக் கூட்டம்.

SHARE

மண்முனை தென் மேற்கு பிரதேசத்திற்கான  சிறு  போக நெற்செய்கை  ஆரம்பக் கூட்டம்.

மாவட்ட விவசாய குழு கூட்டத்தின் தீர்மானத்தின் அமைய அரசாங்க அதிபரின் பணிபுரையின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை படுவான்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள சிறு  போக நெற்செய்கை போது விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பிரதேச செயலக மட்டத்தில் விவசாய  நெற்செய்கைக்காண ஆரம்பக் கூட்டங்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின்  சிறு போக நெற்செய்கை செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி  முகுத்தன் தலைமையில்  கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை(06.03.2025) இடம்பெற்றது.

இப்பிரதேசத்தில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்வதற்கான நேர அட்டவணை, மானிய உரம் வழங்குதல், காப்புறுதி, அறுவடை, போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் இதன்போது மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது கருத்த தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் விவசாயிகள் பாவனையில் உள்ள வங்கி கணக்கு இலக்கங்களை வழங்குவதனால் துரிதமாக மானிய கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

சிறு  போக நெற்செய்கை  செய்கைக்கான ஆரம்ப கூட்டத்திற்கு  மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே.ஜெகன்நாத், மாகாண  நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் கே.பிரதீபன், நீர்பாசன பொறியியலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் விவசாய அமைப்பினர், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.












 

SHARE

Author: verified_user

0 Comments: