5 Mar 2025

தொடர்ந்தும் வெள்ள நிர் ஊடறுத்துப்பாயும் கிரான் பிரதான வீதி

SHARE

தொடர்ந்தும் வெள்ள நிர் ஊடறுத்துப்பாயும் கிரான் பிரதான வீதி.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட  கிராமங்களுக்கான போக்குவரத்து  சேவையினை தொடர்ந்து புதன்கிழமை(05.03.2025) ஆறாவது நாளாகவும்  கடற்படையினரின் உதவியுடன் இராணுவமும் இணைந்து   மேற்கொண்டு வருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக கிரான் பிரதேசத்தில் உருவான காட்டு வெள்ளம் தற்போது ஓரளவு குறைந்துள்ள போதிலும் அப்பகுதியிலுள்ள மக்கள் புதன்கிழமை வரையில் ஆபத்தான பாதையின் ஊடாகவே தங்களது பிரயாணங்களை மேற்கொள்வதை காணக் கூடியதாக இருந்தது.

தற்போது இப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதனால் இப்பகுதி விவசாயிகள் தங்களது துவிச்சக்கர வண்டிகளையும் முக்கிய அத்தியாவசிய உபகரணங்கள் உடமைகள் எனபணவற்றை தோளில் சுமந்தவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதை காணக் கூடியதாக இருந்தது. 

இருப்பினும் சிறுவர்கள் பெண்கள் நோயாளிகளின் நலன் கருதி இப்பகுதி இராணுவத்தினரின் உதவியுடன் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும்  படகுச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதையும் காணக் கூடியதாக உள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில்  அண்மையில் பெய்த பலத்த காரணமாக கிரான் பிரதேச செயலகப்பிரிவு பிரிவில் வாழும் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகளும் சிரமங்களுக்கும் தடைபட்டுள்ளனர். 

மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்து சேவை நிலையத்தினால் ராணுவத்தினரின்  உதவியுடன் அப்பகுதி மக்களுக்கான போக்குவரத்துகள் தற்போது படகுகள் மூலம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

மட்டக்களப்பு கிரான் பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன்  கிரான்  தொப்பிக்கல கிரான் பாலம் ஊடான  பிரதான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

கடந்த 27.02.2025 திகதியிலிருந்து பெய்த மழை காரணமாக சில கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்தினை பிரதேச செயலகமும் இராணுவமும் இணைந்து படகு சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: