21 Feb 2025

மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமார் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மீண்டும் விசாரணை.

SHARE

மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமார் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மீண்டும் விசாரணை.

2016 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு காலத்திற்குள் என்னுடைய ஒரு உறவினர் வெளிநாட்டிலிருந்து 41000 ரூபாய் பணம் வெஸ்டர்ன் யூனியன் மூலம் எனக்கு அனுப்பி இருந்தார். அது தொடர்பாக பணம் எனக்கு எதற்காக அனுப்பப்பட்டது, என என்னிடம் இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் அதிகமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

என தெரிவிக்கின்றார் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் குசுமுத்து விமலசேன லவக்குமார் தெரிவித்தார். 

2021 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைந்து நாங்கள் நினைவேந்தல் செய்தபோது

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாத காலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். அதன் பின்னராக 2021 ஆம் ஆண்டு 12 ஆம் மாசம் 8 ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு 03 மாதம் 25 ஆம் திதி நாங்கள் சட்டமா அதிபரிடம் இருந்து வந்த ஆலோசனைக்கு அமைவாக நாங்கள் அந்த வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டோம். 

அதன் பின்னர் கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு இரண்டாம் மாசம் 24 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரிவினரால் மட்டக்களப்பு காரிய ஆலயத்திற்கு நான் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தேன். 

இந்நிலையில் புதன்கிழமையன்று(18.02.2025) வாழச்சேனை பொலிசாரால் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்னை விசாரிப்பதற்காக அழைப்பை விடுத்திருக்கிறார்கள் என்று தமிழிலும், சிங்களத்திலும் அதற்குரிய அழைப்பு கட்டளைகளை எனக்கு வழங்கியிருந்தார். அதன் நிமித்தம் வியாழக்கிழமை(20.02.2025) காலை 9 மணிக்கு நான் மட்டக்களப்பில் இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் காரியலயத்திற்கு சென்றிருந்தேன். 

2016 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு காலத்திற்குள் என்னுடைய ஒரு உறவினர் வெளிநாட்டிலிருந்து 41000 ரூபாய் பணம் வெஸ்டர்ன் யூனியன் மூலம் எனக்கு அனுப்பி இருந்தார். அது தொடர்பாக பணம் எனக்கு எதற்காக அனுப்பப்பட்டது, என என்னிடம் இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் அதிகமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

உள்நாட்டிலேயே வடகிழக்கு தமிழர் பகுதியிலேயே வாழ்கின்ற அனேக தமிழர்கள் பயத்தோடும், பீதியோடும், அச்சத்தோடும், வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், ஒருவிதமான அடக்குமுறையும், விசாரணைகளும், அவர்கள் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் அச்சத்தோடும் பீதியோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

அதே நிலையில் இங்கு வாழ முடியாத சூழ்நிலையிலே நெருக்கத்தோடும் உள்நாட்டிலே வாழ முடியாது. என புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்களும் அங்கும் பலவிதமான பிரச்சனைகளோடு இருக்கின்றார்கள். 

எங்களுடைய நாட்டிலே அரசாங்கங்கள் மாறுகின்றன, அரசியல் தலைவர்கள் மாறுகின்றார்கள், ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதியும் மாறுகின்றார், ஆனால் அவர்களுடைய முகங்களும், அவர்களுடைய கட்சிகளுடைய நிறங்களும்தான் மாறுகின்றன.  நாட்டிலே இருக்கின்ற சட்டங்களோ, தமிழர்களுக்கு எதிரான நெருக்குதல்களோ இன்னும் மாறவில்லை. 

நாங்கள் எங்களுடைய உள்நாட்டிலே சமாதானத்தோடு இருக்கின்றோம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சர்வதேச நாடுகளுக்கு பலவிதமான வாக்குறுதிகளை கொடுக்கின்றார்கள். ஆனால் உள்நாட்டிலே இருக்கின்ற நாங்கள் சாதாரணமாக எங்களுடைய தொழில்களை செய்து கொண்டிருக்கின்ற பொழுது 2016 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டிற்குள் எனக்கு வந்த 41000 பணத்திற்காக அதாவது என்னுடைய உறவினர் எனக்கு அனுப்பிய பணத்திற்காக வேண்டி நான் 2 மணிக்கு மேலாக விசாரிக்கப்பட்டேன். 

வெளிநாடுகளில் இருக்கின்ற எங்களுடைய உறவினர்கள் ஒரு சிறுதொகை பணத்தை அனுப்பியதற்காக பல வருடங்களுக்குப் பின்னர் நாம் விசாரிக்கப்படுகின்றோம் என்றால் எங்களைப் போன்று எத்தனையோ தமிழர்கள் தமிழ் இளைஞர்கள், தமிழ் சமூகப் பற்றாளர்கள், சமூக ஆர்வலர்கள், என்றும் நெருக்கத்தோடு இருக்கின்றார்கள். எனவே இதனை சர்வதேசம் கண்ணோக்கி பார்க்க வேண்டும். உள்நாட்டிலே இவ்வாறான நெருக்கங்கள் நீக்கப்பட்டு உள்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு தமிழர்களும் நிம்மதியாகவும், மன நிறைவுடனும், வாழ்வதற்கான தீர்வுகளை எங்கள் ஒவ்வொருவருக்கும் பெற்றுதர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன். என அவர் தெரிவித்தார்.













SHARE

Author: verified_user

0 Comments: