புகையிரத நிலையத்தில் துப்புரவு பணிகள்.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் துப்புரவு பணிகள் மற்றும் அழகுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் சனிக்கிழமை(22.02.2025)முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாரணிய அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் எ.கார்மேகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் சாரணிய அமைப்பின் மாவட்ட பிரதிநிதிகள், அங்கத்தவர்கள், உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் துப்புரவு பணிகள் மற்றும் அழகுப்படுத்தும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 730 சாரணர்கள் பங்கு பெற்றியதுடன் பயன் தரும் மரக்கன்றுகளும் இதன்போர் நடப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் நோக்குடன் தொடர்ச்சியாக பல வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான போக்குவரத்துகளில் ஒன்றாக காணப்படும் மட்டக்களப்பு புகையித நிலையத்தை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக சுத்தப்படுத்தி அழகு படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் பழமை வாய்ந்த ஒரு சுற்றுலாத்தலமாக
காணப்படும் இந்த புகையிரத நிலையம் மாவட்ட சாரணிய அமைப்பின் ஏற்பாட்டில்; சுத்தப்படுத்தும்
பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment