மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு கிராமத்தில்
இலாகா என கூறி மக்களை தாக்கிய அதிகாரிகள் - சம்பவ இடத்துக்கு உடனடி விஜயம் செய்த ஸ்ரீநாத்
எம்.பி
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லை கிராமமான கட்டுமுறிவை அண்டிய பகுதிகளில் 25 தொடக்கம் 30 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களை செவ்வாய்கிழமை(25.02.2025) வன இலாகா என கூறிக்கொண்டு அங்கு சென்ற அதிகாரிகள் மூர்க்கத்தனமாக அங்குள்ள மக்களைத் தாக்கியும், மானிடவியலுக்கு ஒவ்வாத நடைமுறைகளை அம்மக்களின் மீது திணித்தும் அம்மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும் அங்குள்ள மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீறிநாத் அவர்களின் கவனத்திற்கு உடன் கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இன்றயத்திமே சம்பவ இடத்திற்குச் சென்ற குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அப்பகுதி மக்களின் ஆதங்கங்களையும், குமுறல்களையும் கேட்டறிந்தது மேற்கொண்டார்.
இது தொடர்பாக வாகரைப் பிரதேச செயலாளருக்கு
பாராளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து தெரிவித்துடன், பிரதேச செயலாளர் ஊடாக அப்பகுதிக்கு
பொறுப்பான கிராம சேவகருக்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கு அம்மக்களுக்கு எதிராக
நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றி ஆய்வு செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
மேலும் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும்
தெரிவித்துள்ளார்.
அப்பகுதிக்குச் சென்ற நபர்கள் அங்கு வசித்த மக்களின்
குடியிருப்புகளைத் தீக்கிரையாக்கியுள்ளதுடன், அங்குள்ள மக்களையும் மூர்க்கத்தனமாக தாக்கியுமுள்ளனர்.
அப்பகுதி மக்களின் மனித உரிமை, மனிதாபிமானம், என்பன அப்பட்டமான இதன்போது மீறப்பட்டதையும்,
மனித உரிமை ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக மனித
உரிமை ஆணைக்குழு மற்றும் அது சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிவித்து அப்பகுதியில் ஏற்பட்ட
சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அம்மக்களுக்கு அங்கு சென்ற பாராளுமன்ற
உறுப்பினர் உறுதியளித்து ஆறுதல் வழங்கியதுடன்,
இவ்விடையம் தொடர்பில் மக்களுடன் தானும், தமிழரசு கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினர்களும்
தொடர்ந்து பக்கபலமாக இருப்போம் என அவர் இதன்போது
மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை (25.02.2025) மதியம் இரண்டு மணியளவில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதிக்குச் சென்ற வனவள இலகா பிரிவினர் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அச்சுறுத்தி அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அச்சுறுத்தியதோடு மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்காக தகவல்களைச் சேகரித்து சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாது மூன்று குடியிருப்புக்களையும் எரியூட்டியுள்ளனர
இது தொடர்பாக கேள்வியுற்று கதிரவெளியில்
இருந்து சென்ற இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நியாயம் கேட்டபோது அவர்களும் மிக
மோசமாக தாக்கப்பட்டதுடன் கைவிலங்கு போடப்பட்டு
குற்றவாளிகளை அழைத்துச் செல்வதுபோன்று மிகவும் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். காணி உரிமைகளுக்கான வயைமைப்பிற்கான
மட்டக்களப்பு இணைப்பாளர் ச.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment