எமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த காரணத்தினால்தான் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்குகூட அரசியல் அதிகாரம் இல்லாமல் உள்ளோம்.
கடந்த காலத்தின் எமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த காரணமாகத்தான், இன்றும் தமிழர்கள் தங்களது அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கூட அரசியல் அதிகாரம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற வேட்பாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை(03.11.2024) மாலை அம்பிளாந்துறையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இத்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
வீதி அபிவிருத்தி, பாடசாலை அபிவிருத்தி, மைதான அபிவிருத்தி, கல்வி விருத்தி, உள்ளிட்ட பல அபிவிருத்திகளை எமது கட்சியின் தலைவர் பிள்ளையான் அண்ணன் அவர்கள்தான் முன்னின்று மேற்கொண்டார். எனினும் எமது கட்சியின் தலைவருக்கே பேசுகிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க தாந்த மலைக்குச் செல்லும் வீதி மழைக்காலத்தில் குன்றும் குழியுமாக பயணிக்க முடியாமல் இருந்தது ஆலய நிருவாகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அந்த வீதி செப்பனிடப்பட்டுள்ளது. அந்த வீதியில்கூட வீட்டு சின்னத்தை பொறித்துள்ளார்கள். அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாது உள்ளது.
மக்களுக்கு குடிநீர் பெற்றுக் கொடுக்க முடியாது, வீதி அமைத்துக் கொடுக்க முடியாது, வீடு கட்டி கொடுக்க முடியாது, பாடசாலை அபிவிருத்தி செய்து கொடுக்க முடியாது, உரிமையும் பெற்றுக் கொடுக்க முடியாது, ஆகவே எதற்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்கள்.
நாட்டின் ஜனாதிபதியுடன் இணைந்து ஆட்சி செய்வதற்கு தாங்கள் மாத்திரம்தான் தகுதி பெற்றவர்கள் எனவே தாங்கள் தயாராக இருக்கின்றோம் இணக்க ஆட்சி செய்வதற்கு. என ஊடகங்களில் அவர்கள் தெரிவித்துள்ளதைப் பார்த்தோம். இந்த விடயத்தை 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மான நிறைவேற்றும்போது கூறி இருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து இணக்க ஆட்சி செய்யப் போகின்றோம் என்று அப்போதே கூறியிருந்தால் எங்கள் இளைஞர்கள் இறந்திருக்கவும் மாட்டார்கள், ஆயிதம் தூக்கி போராடி இருக்கவும் மாட்டார்கள் இன்று அதல பாதாளத்திற்கு எமது சமூகம் தள்ளப்பட்டு இருக்காது, பிள்ளையார் அண்ணன் அவர்களும் ஆயுதம் ஏந்தி போராடி இருக்க மாட்டார். அனியாயமாக எமது சமூகம் கணவனை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், அப்பாவை இழந்த பிள்ளைகள், என எமது சமூகம் அல்லல்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
பொருளாதாரத்தில் கடைசி மட்டத்தில் நாம் இருக்கின்றோம். பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகம் பேருக்கின்றார்கள். கிழக்கிலே 58,000 இற்;கும் மேற்பட்டோர் வீடுகள் இல்லாமல் இருக்கின்றார்கள். இதற்கு எல்லாம் வித்திட்டவர்கள், ஆயுதம் ஏந்தி தமிழர்களை போராடுங்கள் என்று அனுப்பியவர்கள், தற்போது வந்து கூறுகின்றார்கள் நாங்கள் இணக்க ஆட்சி நடத்துவதற்கு தயார் என்று. போராட்டத்திற்கு அவர்கள் எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை. சாணக்கியன் எந்த போராட்டத்தில் நிற்கவில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து விட்டு வந்திருக்கின்றார். அவருக்கு போராட்டத்தை பற்றி தெரியாது. நாங்கள் யாரையும் விமர்சித்து அரசியல் செய்யவில்லை. மக்கள் இந்த விடையத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
அரசாங்கத்துடன் இணைந்து இருக்கின்ற காட்சிகள்தான் மக்களுக்கு அதிகமாக பணத்தை கொடுக்கிறார்கள் என தெரிவித்தார்கள். தற்போது அவர்கள் துண்டு பிரசுரம் வழங்குவதற்கு ஒரு இளைஞர்களும் இல்லாத காரணத்தினால் 2000ஈ 3000 ரூபாய் நாள் சம்பளத்திற்கு ஆட்களைப் பிடித்து அனுபகின்றார்கள் , அரிசி, பருப்பு தருகின்றோம் என்று பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். கூட்டத்துகளுக்கு சென்றால் பணம் வழங்குகின்றார்கள். இவ்வாறு மிகவும் மோசமாகவும், அனைத்து மின்சார கம்பங்களிலும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டும், தேர்தல் விதிமுறைகளையும் மீறுகின்றார்கள்.
எனது கட்சி மிகத் தெளிவாக இருக்கின்றது.
எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டதோ அவ்வாறே அந்த கட்டுக்கோப்புடன் அதே இலக்குடன் பயணித்துக்
கொண்டிருக்கின்றது. எமது கட்சியை ஆதரிப்பதை தவிர வேறு எந்த வழியும் கிழக்கு மாகாணத்தில்
உள்ள தமிழர்களை பாதுகாப்பதற்கும், தமிழர்களின் இருப்பு பாதுகாப்பதற்கும், எந்த வழியும்
இல்லை. இதில் மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். எனது ஜனநாயக உரிமையை மிகவும்
சரியாக பயன்படுத்த வேண்டும். கடந்த காலத்தின் எமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த காரணமாகத்தான்
இன்றும் தமிழர்கள் தங்களது அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்குகூட அரசியல் அதிகாரம்
இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment