நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவு.
என நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் கிழக்கின் தலைவர் குணசேகரம் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகடியில் திங்கட்கிழமை(04.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…….
கிழக்கு மண்ணில் அரசியல் சார்ந்த பிரச்சினைகள்
தற்போது ஏற்பட்டிருக்கின்றன. நாம் அரசியலில் ஈடுபடக்கூடாது சமூக சேவையில் மாத்திரம்தான்
எமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்திருந்தோம். ஆனால் காலத்தின் கட்டாயம்
நாங்கள் அரசியல் பக்கம் எமது ஆதரவை வழங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
அந்த வகையில் எங்களுடைய நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு அமைவாக, எனது கோரிக்கைகள் பலவற்றை கிழக்கில் உள்ள பல அரசியல் தலைவர்களிடம் முன் வைத்திருந்தோம். அதற்கு யாரும் செவிசாய்க்காத வகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் நாம் எமது சமூகம் சார்ந்து முன்வைத்த கோரிக்கைக்கு தீர்வு தருவதாக உறுதியளித்திருந்தார்.
அதன் இணங்க இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு எமது ஆதரவை வழங்குவது என தீர்மானித்துள்ளோம்.
ஒரு இனம் அந்த இனத்துக்கு சாதகமாக பேசுவது வழக்கம். ஆனால் இன்னும் ஒரு இனத்தை தாழ்த்தியோ தாக்குவதான சொற்பதங்களையோ பாவிப் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இந்த நிலையில்தான் தன்மானத்துடன் தமிழன் கிழக்கில் வாழ வேண்டுமாக இருந்தால் கிழக்கு மாகாணத்திலே இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு நாங்கள் ஆதரவு வழங்குவது என தீர்மானித்திருக்கின்றோம்.
தமிழ் மக்கள் மத்தியில் எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நிச்சயமாக அரசியல் பின்புலம் தேவையாக உள்ளது. இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சிக்கு இரண்டு பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்கும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட 66 வாக்குகளால் அக்காட்சிக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று இல்லாமல் போனது.
அந்த வகையில் தான் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவை வழங்கி அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்படுவது என முடிவெடுத்து இருக்கின்றோம்.
எல்லைப் பிரச்சினை, எமது தமிழ் யுவதிகள் மிக தூர இடங்களுக்கு வியாபார ஸ்தலங்களுக்கும் சில்லறை கடைகளிலும், புடவைக் கடைகளிலும், தொழில் செல்வதனால் அவர்கள் மதமாற்றப்படுவது, அதிகளவு நிதியைக் கொடுத்து தமிழர்களின் காணி சூறையாடப்படுகின்றன, இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தின் அட்டை பள்ளம் எனும் கிராமத்தில் தமிழர்களின் இருப்பு அழிந்து போயிருக்கின்றது. பாண்டிருப்பு, நீலாவனை, போன்ற பிரதேசங்களில் பல்வேறு எல்லைப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. தமிழர்கள் பூர்வீகமாக வாழ்கின்ற வீரமுனை கிராமத்தின் வளைவு கோபுரத்தைகூட எம்மால் அமைக்க முடியாத அளவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.
இச்சந்தர்ப்பத்தில் பல்வேறு நபர்களின் உந்துதலின் பேரில் பல சுயேட்சைக் குழுக்களும் இந்த பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இக்குழுக்கள் தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரப்பதற்காகவேதான் களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே மக்கள் சுயேட்சைக் குழுக்களை நிராகரித்து படகு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
எனவே கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும்
வாக்குகளை வீணடிக்காமல், சிதறடிக்காமல் படகு சின்னத்திலே போட்டியிடும் தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுகின்றோம். என
அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment