25 Jun 2024

கடந்த காலங்களை நாம் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்.

SHARE

கடந்த காலங்களை நாம் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்.

இந்த மண்ணிலே ஏற்பட்ட விடையங்களையும், கடந்த காலங்களை நாம் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 50  மில்லியன் நிதி ஒதுக்கீட்டில கொங்றீட் வீதியாக புனரமைக்கப்பட்ட ஒரு கிலோ மீற்றர் வீதியைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(24.06.2024) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்

மட்டக்களப்பு மாவட்டத்திலே அடுத்த ஐந்து வருடத்திலே நாங்கள் செய்யவேண்டிய பல வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைச் செய்து கொடுப்பதற்குத் தேவையான அடித்தளங்களை நாங்கள் தற்போதிருந்தே வடிவமைத்துக் கொண்டிருக்கின்றோம். 2024, 2025 ஆம் ஆண்டுகள் தேர்தல் ஆண்டாக இருக்கப் போகின்றன. அதிலே மக்கள் ஆணையை மிகச் சரியாகச் செலுத்த வேண்டும். அதன்பால் வருகின்ற தலைவர்களுடன் இணைந்து எமது கிராமங்களை விரைவாக கட்டியெழுப்ப வேண்டும்.

உலகத்திலே ஏற்படுகின்ற சவால்களை வெல்லக் கூடிய சூழலுக்கு ஏற்ப பாடசாலைகளையும் கட்டியெழுப்பினோமா என்றால் இல்லை. இது இப்பகுதியில் மாத்திரமல்லை பல இடங்களில் உள்ளன. எனவே இக்கிராமத்தின் தேவைகளும், நிதிப்பாய்ச்சலும் அதிகமாக உள்ளது என்பதை நான் உணர்கின்றேன். 

கல்விதான் உலலகளாவிய ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட விடையங்கள் ஒரு வரலாறாகும். இந்த மண்ணிலே ஏற்பட்ட விடையங்களையும், கடந்த காலங்களை நாம் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். 

மாகாணமே பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் தமது அடையாளத்தை நிறுவி தலைவர்களாகவும், முதலமைச்சராகவும் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில ;தமிழர்களுடைய பிரச்சனைகளும். வாக்குப் பிரிவுகளும் வந்திராமல்  ஒரு சிந்தனை ரீதியான மாற்றத்துடன் செயற்படுவதற்கு கிராமப் புறமக்கள் பாடுபட வேண்டும். 

இதனைவிடை பாரிய நிதிப்பாய்ச்சல் ஆண்டாக 2025 ஆம் ஆண்டை நாம் மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கின்றோம். அதனை பிரதேச மட்டக் குழுவில் மக்கள் கலந்துரையாடி முக்கியமான தேவைகளை மக்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் மாதுளன், தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தர் ரவீந்திரன்பாடசாலை, அதிபர சபேசன், மற்றும் கிராம பொதுமக்கள உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 











SHARE

Author: verified_user

0 Comments: