25 Jun 2024

மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதி இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனிடம் தெரிவித்த விடையம்.

SHARE

மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதி இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனிடம் தெரிவித்த விடையம்.

கடந்த காலங்களைப்போல் நாங்கள் பிழையான விடைங்களையும்இ பிரச்சனையான விடையங்களையும்இ நாம் கொண்டுவரமாட்டோம் எனவே இணைந்து செயலாற்றுவோம் என ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார். ஆகவே நாம் இணைந்து செயலாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளோம்

என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் வாயிற் கதவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட்கிழமை(24.06.2024) நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் .புட்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட ஒன்பது இலெட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவ்வாயிற் கதவு அமையப் பெறவுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயம்இ மற்றும் மண்டூர் நவகிரி நகர் வித்தியாலயத்திற்கும் தலா ஒவ்வொரு நிழற்பிரதி எடுக்கும் இயந்திரம் அன்றயத்தினம் போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட தலா இரண்டு இலெட்சம் நிதி ஒதுக்கீட்டில் இந்த நிழற்பிரதி எடுக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுளில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டுடிருந்தார். இதன்போது மேலும் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன்இ முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்இ பாடசாலைகளின் அதிபர்இ ஆசிரியர்கள்இ பிரதே செயலக உயர் அதிகாரிகள்இ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் பொதுஜனக் பெரமுனக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்போவதாக செய்திகள் வெளிவருகின்றனஇ உங்களுடைய கட்சி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக கூறியிருக்கின்றீர்களே! என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மட்டக்களப்புக்கு வருகைத்தந்தபோது எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் கரியாலயத்திற்கும் வருகை தந்திருந்தார். அவருடன் தொடர்ந்தும் இயங்குவதென்று நாங்கள் முடிவெடுத்திருக்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தல் வருகின்றபோது பல கட்சிகள் போட்டியிடலாம். இருந்தாலும் இந்த நாட்டுக்குத் தேவையான உறுதியான திட்டங்களோடு இருக்கின்ற எங்களுடைய கிழக்கு மாகாண மக்களின் நலங்களும்இ முக்கியமாக தமிழ் மக்களுடைய அதிகாரப் பகிர்வு சம்மந்தமாக வெளிப்படையாகப் பேசுகின்றவர்களை நாங்கள் ஆதரிப்போம்.

தமிழ் மக்களுடைய பிரச்சனைளை மிக விரைவாகத் தீர்க்க வேண்டும்இ காணிப்பிரச்சனைஇ மகாவலிஇ உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் நாம் ஜனாதிபதியினுடைய சந்திப்பிப்போது மிகத் தெழிவாக கூறப்பட்டுள்ளது.

கடந்த காலங்களைப்போல் நாங்கள் பிழையான விடைங்களையும்இ பிரச்சனையான விடையங்களையும்இ நாம் கொண்டுவரமாட்டோம் எனவே இணைந்து செயலாற்றுவோம் என ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார். ஆகவே நாம் செயலாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: