27 Jun 2024

கல்முனை பிரதேச செயலக விடையத்தில் தேர்தலுக்கு முன்னர் சில விடையங்கள் தீர்க்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் உள்ளன.

SHARE

கொள்கை ரீதியாக கல்முளை பிரதேச செயலகத்திற்கு ஆகக் குறைந்தது கணக்காளரையாவது நியமிக்க வேண்டும். என்பதில உயுதியாக சில விடையங்கள் நடைபெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்னர் சில விடையங்கள் தீர்க்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் உள்ளன. என கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த இராஜாங்க அமைச்சராக இருக்கின்றீர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்காக அங்குள்ள தமிழ் மக்கள் போராடி வருகின்றார்கள். நீங்கள் இவ்விடையத்தில் பாரா முகமாக இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றார்களே என செவ்வாய்க்கிழமை(26.06.2024) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதிக்கு விஜயம் 

கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

கல்முனை பிரதேச செயலக விடையத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிலைப்பாடும், எனது நிலைப்பாடும் உறுதியானது அங்கிருக்கின்ற தமிழர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய நிருவாக அலகு ஒன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதில் எதுவித குழப்பமும் இல்லை. ஆனாலும் இப்போதிருக்கின்ற சூழல் ஒரு சாத்தியம் இல்லாத சூழலை உருவாக்கியிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்திருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றார்கள். இதனை எப்படியாவது காலத்தை இழுத்தடிக்க வேண்டும், எனும் நோக்குடன் சில அரசியல் ரீதியான அழுத்தங்களும் பிரயோகித்து வருகின்றார்கள். கொள்கை ரீதியாக அந்த பிரதேச செயலகத்திற்கு ஆகக் குறைந்தது கணக்காளரையாவது நியமிக்க வேண்டும். என்பதில் உதியாக சில விடையங்கள் நடைபெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்னர் சில விடையங்கள் தீர்க்கப்பட வேண்டிய வாய்ப்புக்கள் உள்ளன. அதற்குரிய உதவிகளையும் நாங்கள் செய்திருக்கின்றோம். தேர்தல் முடிந்த கையோடு இப்பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு இஸ்லாமிய மக்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களைத் தீர்த்து அதனை உறுதியான நிருவாகக் கட்டமைப்பில் கொண்டு கொடுக்க வேண்டும்  அதுவும் எங்களுடைய காலத்திலே முடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் செயலாற்றுகின்றோம். நேரடியாக போராடுகின்ற மக்களுக்கு சென்று வாக்குறுதி வழங்கக் கூடிய சூழலில் நாம் இல்லை என்ற காரணத்தினால்தான் நாம் அங்கு செல்ல வில்லை. என்றார்.

இந்நிலையில் அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அவர்கள் கொழும்புக்குத் திரும்பிய மறுநாளே ஜனாதிபதியினால் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களுக்கு மேலும் சுற்றாடலுக்குரிய இராஜாங்க அமைசராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். உங்களுக்கும் அமைச்சரவை அந்தஸ்த்து உள்ள அமைச்சு கிடைக்கவுள்ளதாக சிலர் கருத்துத் தெரிவிக்கின்றார்களே அதில் உண்மைத்தன்மை இருக்கின்றாதா எனவும் ஊடகவியலானர்கள் அவரிடம் வினவினர்.

இல்லை அதிலே உண்மைத்தன்மை இருக்க முடியாது ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்று இருக்கின்ற சூழலிலே கடினமான காலங்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது. நான் நம்பவில்லை இந்தக் காலத்திலே அமைச்சரவை அந்தஸ்த்து உள்ள அமைச்சு ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நான் நம்பவில்லை. இந்த குறுகிய காலத்திற்குள்ளே அவ்வாறு ஒன்று கிடைத்தாலும் அதனை வைத்து எதனைச் சாதிக்க முடியும் என்ற பெரும் கேள்வி இருக்கின்றது.



அதுபோன்று நண்பர் வியாழேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிகமான அமைச்சு என்பது  கடந்த காலத்தில் தனியான அமைச்சாக அது இருந்தது தற்போது ஜனாதிபதிக்குக் கீழே கொண்டு வரப்பட்டது அதனை அவர் மேலதிகமாக வழங்கியிருக்கின்றார். அதிலே ஏதாவது நல்ல விடையங்களை செய்து காட்டுவார் என நான் நம்புகின்றேன் என நான் நம்புகின்றேன். என அவர் இதன்போது பதிளித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: