27 Jun 2024

யாரும் தற்போது “ஈழத்தைப் பெற்றுத் தருவேன்” என பேசமுடியுமா? முடியாது

SHARE

யாரும் தற்போதுஈழத்தைப் பெற்றுத் தருவேன்என பேசமுடியுமா? முடியாது மாறாக மாகாணசபை முறைமையைப் பற்றித்தான் பேசமுடியும். எனவே உரிமை சார்ந்த விடையங்களிலே மாகாணசபை முறைமையை நாங்கள் கையில் எடுக்க வேண்டும்.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கிராமிய வீதியபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். 

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக களுவாஞ்சிகுயில் மூடப்பட்டுக்கிடந்த பழைய நீதிமன்ற வீதி செவ்வாய்கிழமை(25.06.2024) மாலை மேற்படி இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டு புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்தார். 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிராம பெரியோர்கள், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

நான் சிறிய வயதில் களுவாஞ்சிக்குடிப் பகுதிக்கு வந்ததில்லை காரணம் நான் 1991 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து விட்டேன். இயக்கத்திலிருந்தபோது களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த கரிகாலன், சுரேஸ், கண்ணன், ரகு, ஆகியோரோடுதான் செயற்பட்டேன். அவர்கள் இப்பகுதியைப் பற்றி எனக்கு தெரிவித்திருந்தார்கள். 

இந்நிலையில்தான் நாம் இன்னமும் வீதிகள் இல்லாமல், ஒரு அடக்கு முறைக்குள் இருந்து வந்திருக்கின்றோம் என்பதை உணரமுடிகின்றது.  எமது மண் மெல்ல மெல்ல உயற்சியடைந்து வருகின்றது. நாமும் உயரவேண்டும்நாங்கள் தனிநாடு கேட்டு போராடி பலவற்றை இழந்து விட்டோம். தற்போது தழிழருக்கு உரிமையும், அபிவிருத்தியும் தேவையாகவுள்ளது.” அபிவிருத்தியை நாங்கள் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மெல்ல மெல்ல மேற்கொண்டு வருகின்றோம்.  ஆனாலும் எமது மாவட்டத்தின் தொழில் துறை, உற்பத்தி இன்னமும் வளற்சியடையாமல் அடிமட்டத்திலேயேதான் காணப்படுகின்றது. எனவே மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை மிகவும் நுட்பமாக செய்து வரவேண்டிய தேவை உள்ளது. 

யாரும் தற்போதுஈழத்தைப் பெற்றுத் தருவேன்என பேசமுடியுமா? முடியாது மாறாக மாகாணசபை முறைமையைப் பற்றித்தான் பேசமுடியும். எனவே உரிமை சார்ந்த விடையங்களிலே மாகாணசபை முறைமையை நாங்கள் கையில் எடுக்க வேண்டும். இதனையும் கையில் எடுக்காமல் தட்டிவிட்டது. களுவாஞ்சிகுடித் தம்பி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஆலோசகர் சுமந்திரன்தான் என பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பேசியுள்ளார். மாகாண சபையை இல்லாமலாக்கியவர் சுமந்திரன்தான். 

இறுதியாக கலைக்கப்பட்டதுதான் வட மாகாணசபையாகும். அப்போது முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகின்றபோது அவரும் கஜேந்திரகுமாரும் சேர்ந்து அவர்களுடைய கட்சிக்கு வடக்கிலே ஒரு பலவீனம் ஏற்பட்டுவிடும் என்பதற்காக தமிழர்கள் போராடி இரத்திம் சிந்தி பெற்ற மாகாணசபையை விட்டு விட்டுள்ளோம் இதனால் நாம் அலைந்து திரிகின்றோம். 

அரசாங்கத்திடமிருந்து ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டோம் என்பவர்கள் பாராளுமன்றத்திலே அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கின்றார்கள். 60 வருடங்களாக அரசாங்கத்திடதிருந்து ஒன்றையுமே பெற்றுக் கொள்ள மாட்டோம் என்பவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கின்றார்கள். உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாதுள்ளனர். 

2008 ஆம் ஆண்டு தேர்தலிலே பாராளுமன்ற மட்டக்களப்பிலே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட  கிங்சிலி இராஜநாயகத்தை சுட்டுவிட்டார்கள் பின்னர்தான்  பா.அரியநேத்திரன் அவ்விடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அப்போது அரியநேத்திரன், தங்கேஸ்வரி, ஜெயானந்தமூர்த்தி ஆகிய மூவரும் மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்கள். அப்போது யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது வாகரையில் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் வாகரை மக்களை மீட்டு வாருங்கள் என நான் இந்த மூவரிடமும் தெரிவித்தேன். தம்பி நீங்கள் கூறுவது நல்ல விடையம்தான் எதற்கும் நாங்கள் வன்னியில் கதைத்துவிட்டு சொல்கின்றோம் என அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இவ்வாறானவர்கள் மாகாணசபைத் தேர்தலிலே வெளிப்படையாயவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உதவினார்கள். அதே அரியநேத்திரன் அவர்கள் எனது காரியாலயத்திற்கு வந்து தம்பி நாங்கள் வேலை செய்யலாமா என கேட்டார். நீங்கள் சந்தோசமாக வேலை செய்யுங்கள் என தெரிவித்திருந்தேன். இவ்வாறான நடிகர்கள்தான் அவர்கள். 

மட்டக்களப்பு மக்களை அவர்கள் காப்பாற்றுபவர்களாக இருந்தால் அன்றே அவர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும். தற்போது சாணக்கியன், சுமந்திரன்போன்ற புதியவர்கள் வந்து உரிமையைப் பெற்றுத்தரப்போகின்றோம் என்று பேசுவது வேடிக்கையான விடையமாகும். 

நாங்கள் வரலாற்றிலே கடந்து வந்த கற்றுக் கொண்ட பாடங்களை வைத்துக் கொண்டு மக்களுக்குத் தேவையான விடையங்கள் என்ன எதனைச் செய்யவேண்டும். என்பதற்கிணங்க எமது கட்சி செயற்பட்டு வருகின்றது. 

நாம் பட்டிருப்பிலே ஒசுசல, களுவாஞ்சிகுடி சந்தியிலே சிக்னல் லைட், உள்ளிட்ட பல விடையங்ளை மிகவிரைவில் மேற்கொள்ளவுள்ளோம் மேலும் பேரும் புகளும் உள்ள ஓர் நகரமாக களுவாஞ்சிகுடி நகரை மாற்றுவதுதான் எமது நோக்கு அதற்கு மக்கள் தலைவர்களை இங்கிருந்தே தெரிவு செய்ய வேண்டும் 

சரியான திட்டமிடலைச் செய்து கிழக்கு மாகாணசபையை தமிழர்கள் கைப்பற்றவேண்டும் இதற்கான திட்டமிடலை தற்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டும். 

மாற்று சமூகத்தைப் பற்றி நாம் பெறாமைப்பட்டு ஒன்றும் செய்யமுடியாது. அதனை முறயடிப்பதற்கு எம்மிடம் என்ன திட்டமிடல் இருக்கின்றது. தமிழரசுக் கட்சியிடமிருந்தால் நாம் தலைவணங்குகின்றோம். அவர்களிடம் ஒன்றுமே இல்லை. எமது கட்சியிடம் மாத்திரம்தான் 80 வீதமான திட்டங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளன. என அவர் இதன்போது எடுத்தியம்பினார்.
















 

SHARE

Author: verified_user

0 Comments: