உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிரதான சுற்றாடல் தின விழிப்புணர்வு நிகழ்வு.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் அமைச்சினால் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான சுற்றாடல் தின நிகழ்வு புதன்கிழமை(05.06.2024) மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு இராம கிருஷ்ன மிஷன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கலந்து கொண்டார்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஈச்சந்தீவு இராமகிருஷ்ன மிஷன் வித்தியாலயத்தில் சுற்றாடல் சார் கண்காட்சி இதன்போது இடம்பெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் டி.தர்மதாச தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வில். பயனுறுதி மிக்க நில பயன்பாட்டின் ஊடாக நலம் மிகுந்த நாடு எனும் கருப்பொருளுக்கு அமைவாக இடம் பெற்ற கண்காட்சி நிகழ்வை மாவட்ட அரசாங்க அதிபர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாடல், கலை கலாசார நிகழ்வுகளும்; இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டதோடு சுற்றாடல் சார்பான உரைகளும் இதன்போது நிகழ்த்தப்பட்டன.
இன்றைய இந்த நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்யானந்தி, மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment