மட்டக்களப்பு கள்ளியங்காடு புத்தூர் நாகம்மா ஆலய அறநெறிப் பாடசாலைக்கு நிரந்தர குடிநீர் இணைப்பு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பத்தமாதன் மகேஸ்வரி அறக்கட்டளை "நலன்புரி சங்கம்" சார்பாக பத்மநாதன் நடேசன் குடும்பத்தினரால் கடந்த 02.06.2024 திகதி குறித்த இலவச குடிநீர் இணைப்பு அறநெறி மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கள்ளியங்காடு புத்தூர் நாகம்மா ஆலய நிருவாக சபையினர், அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர்கள், சங்க உறுப்பினர்கள் அறநெறி பாடசாலையின் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment