உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு களுவாஞ்சிகுடியில் மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி.
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில்; உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்த்தி வியாழக்கிழமை(18.04.2024) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரை வந்தடைந்தது. இந்நிலையில் உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு அப்பகுதி மக்கள் சுரடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அன்னையின் உருவப்படம் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகியிருந்தது. வெள்ளிக்கிழமை(19.04.2024) மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இவ்வூர்தி பவனி இடம்பெற்று வருகின்றது.
0 Comments:
Post a Comment