17 Apr 2024

புதிய உடற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு.

SHARE

புதிய உடற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு.

தொற்ற நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு 30 லட்சம் ரூபாய் செலவில்  உலக வங்கியின் நிதியுதவியின் கிழ்  புதிய உடற்பயிற்சி நிலையம் சுகாதார அமைச்சினால் பொதுமக்களின் பாவனைக்காக மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவை பிரிவினால் பொதுமக்களை தொற்ற நோயில் இருந்து காப்பாற்றும் பொருட்டு  உடற்பயிற்சியில் ஈடுபடுவோம் வாழ்க்கையின் ஆரோக்கியத்தை பேணுவோம் என்னும் விசேட செயற்றிட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் உடற்பயிற்சி நிலையங்கள் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் தினமும் 30 நிமிட உடற்பயிற்சி ஆரோக்கியத்தின் வளர்ச்சி எனும் பொதுமக்களை வலுப்படுத்தும் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  மாவட்ட செயலக ஊடாக உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் இந்த செயல்திட்டம் பிராந்திய  சுகாதார சேவை அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு கோட்டை பூங்கா வளாகத்தில் திறந்த வெளி உடற்பயிற்சி நிலைய திறப்பு விழா நிகழ்வு  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி -காந்த் தலைமையில் புதன்கிழமை(17.042024) இடம்பெற்றது இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்  எந்திரி என்.சிவலிங்கம்  கலந்து கொண்டு இதனைத் திறந்து  வைத்தார்.

இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களில் 85 வீதமானவை தொற்ற நோய்களின் காரணமாக இடம்பெறுவதால் சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவை பிரிவினால் பொதுமக்களை தொற்ற நோயில் இருந்து காப்பாற்றும் பொருட்டு விசேட  இந்த செயற்றிpட்டம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆரம்ப இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் தொற்ற நோயில்  பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் நவலோஜிதன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலகமுன்னாள் பணிப்பாளர்  வைத்தியர் கு.சுகுணன்  மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் மாநகர சபையின் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: