இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சமூக நல திட்டங்கள் முன்னெடுப்பு.
கிழக்கு மாகாணத்தின் பிரதான போதனா வைத்தியசாலையாகத் திகழும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாட்டை நீக்கு முகமாகவும் ஒருவர் வழங்கும் இரத்ததானம் நான்கு உயிர்களை காப்பாற்றும் எனும் உயரிய சிந்தனைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் 48 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(18.08.2023) கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தலைமையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வும், மட்டு வவிக்கரை வீதியில் பயன் தரும் மரக்கன்றுகளை நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டன.
இதுபோன்று இராஜாங்க அமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் சமூக நலத் திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டது.
இதன் முதன்மை நிகழ்வாக தானங்களில் சிறந்த தானமான இரத்த தானம் வழங்கும் நிகழ்வில். நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு தமது இரத்த தானத்த வழங்கி வைத்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி தில்ஷிகா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டு வாவி வீதியில் இடம்பெற்ற பயன் தரும் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்களால் மரக்கன்றுகளுக்கு பாதுகாப்புக்காக கூடுகளும் இதன்போது அமைத்தனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment