கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா – 2023.
ஈழ மணித்திருநாட்டில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு தமிழகத்தின் படுவான்கரைப் பெருநிலத்தில் பூர்வீக வரலாற்று சிறப்பு மிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2023 ஆம் ஆண்டு வருடாந்தப் பெருவிழா 19.08.203 அன்று அதிகாலை திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 04.09.2023 அன்று காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக அவ்வாலய நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
“போர்த்துக்கேயரின் போர்ப்படையை எதிர்த்து துரத்திய பரம்பொருள்” , “புல்லுண்ட கல் நந்தி” கொண்டமைந்த வேண்டு வோர்க்கு வேண்டும் வரங்களை வழங்கும் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாக்கள் வரிசையில்…
உத்சவப்பெருவிழா நிகழ்வுகள் எதிர்வரும் 18.08.2023 அன்று இரவு வெள்ளிக்கிழமை கிராம சாந்திக் கருமங்கள் நடைபெற்று மறு நாள் அதிகாலை 19.08.2023 சனிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆலயத் திருவிழாக்கள் 5 நாட்கள் நடைபெற்று, பின்னர் பத்து நாட்கள் குடித்திருவிழாக்கள் சிறப்புற இடம்பெற்றதைத் தொடர்ந்து எதிர்வரும் 03.09.2023, ஞாயிற்றுக்கிழமை பி.ப, 04, மணிக்கு தேரோட்டப் பெருவிழா இடம்பெறவுள்ளது.
இதில் விநாயகர்தேர், மற்றும் சித்திரத்தேர் என இரு தேர்களையும் பல்லாயிரக்கணக்கான அடியார்களால் வடம்பிடித்து இழுக்கும் காட்சி மிகவும் பிரமாதமாக நடைபெறும்.
அன்றயதினம் இரவு முனைக்காடு வீரபத்திரர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று திருவேட்டைத் திருவிழாவும் இடம்பெற்று மறுநாள் தீர்த்தோற்சவத்துடன் இவ்வாண்டுக்கான உத்சவம் இனிதே நிறைவு பெறவுள்ளது.
19.08.2023 அன்று இரவு தொடக்கம் 23.08.2023, வரை ஆலய பொதுத்திருவிழா உள்வீதியில் நடைபெறும். பின்னர் குடித்திருவிழாக்கள் வரிசையில்…
24.08.2023 வியாழக்கிழமை, பொன்னாச்சிகுடி பெருமக்களின் திருவிழா, 25.08.2023 வெள்ளிக்கிழமை திகடன்குடி பெருமக்களின் திருவிழா, 26.08.2023 சனிக்கிழமை சஷ்டிகுடி பெருமக்களின் திருவிழா, 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை பெத்தான்குடி பெருமக்களின் திருவிழா, 28.08.2023 திங்கட்கிழமை கோப்பிகுடி பெருமக்களின் திருவிழா, 29.08.2023 செவ்வாய்க்கிழமை கச்சிலாகுடி பெருமக்களின் திருவிழா, 30.08.2023, புதன்கிழமை பணிக்கனாகுடி பெருமக்களின் திருவிழா, 31.08.2023 வியாழக்கிழமை படையாட்சிகுடி பெருமக்களின் திருவிழா, 01.09.2023, வெள்ளிக்கிழமை கலிங்ககுடி பெருமக்களின் திருவிழா, 02.09.2023 சனிக்கிழமை உலகிப்போடிகுடி பெருமக்களின் திருவிழா நடைபெறும்.
தொடர்ந்து 03.09.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தேரோட்டம் நடைபெற்று பின்னர் அன்று இரவு முனைக்காடு வீரபத்திர சுவாமி ஆலய முன்றலில் திருவேட்டை நடைபெற்று மற்றுநாள் 04.09.2023 திங்கட்கிழமை அதிகாலை தீர்த்த உத்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment