மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கஈஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்.
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழ்பெற்ற தொன்மையான ஆலயங்களில் ஒன்றான அமிர்தகழி மாமாங்கஈஸ்வரர் ஆலையத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் புதன்கிழமை(16.08.2023) நடைபெறது.
வரலாற்று சிறப்பு மிக்க அமிர்தகழி மாமாங்க ஈஸ்வரர் ஆலையத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மாமாங்கஈஸ்வரர் ஆடி அமாவாசை தீர்த்தம் இடம்போது மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
இதன்போது தந்தையர்களை இழந்தவர்கள் பிதிர்கடன் செய்யு நிகழ்வு பிரதான நிகழ்வாக நடைபெற்றன. இறந்த ஆத்மாக்களை நினைத்து ஆண்டுதோறும் பிதிர்களுக்கு அதிலும் ஆண்களுக்கான பிதிர் வழங்கும் சிறப்பான நாளாக ஆடி அமாவாசையும், தாய்மார்களுக்கான பிதிர் கடண்களை செய்யும் நாளாக சித்திரா பௌர்ணமியும் திகழ்கின்றது. அந்தணர்களுக்கு தானம் வழங்கி பிதிரர்களுக்கு பின்டவைத்து தெப்பை போட்டு பிதிர்கடன்களை வழங்கி தீர்தமாடி ஏழைகளுக்கு தான தர்மங்களை செய்து நிறைவேற்றி எமது மூதாதயர்களை மகிழ்வித்த நிகழ்வு இவ்வாலயத்தில் வருடந்தோறும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஸ்ரீ மாமாங் ஈஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் பல்லாயிரக் கணக்கான அடியார்கள் புடைசூழ செவ்வாய்கிழமை(15.08.2023) மிகவும் வெகுவிமர்சையாக நடைபெற்றது மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகியவற்றினை ஒருங்கே அமையப் பெற்ற இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 07 ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவ ஸ்ரீ இரா.ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் புதன்கிழமை காலை, விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று, பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளிவீதி பஞ்சமுக விநாயர், தேரில் வலம்வர அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் என பலரும் வடம்பிடித்து தேரிழுக்க உற்சவம் சிறப்பாக நடை
பெற்றது.
இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டதுடன் இதன்போது நாட்டியாஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றன.
0 Comments:
Post a Comment