டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் கட்சியை ஆரம்பிக்கின்றபோது இருந்த கொள்கைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் காலத்திலும் வந்துள்ளது. ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார.
டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் கட்சியை ஆரபம்பிக்கின்றபோது இருந்த கொள்கைகள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் காலத்திலும் வந்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் அனைத்து மக்களையும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகளின்றி இலங்கையர்கள் என்ற நோக்குடனேதான் பார்க்கின்றார். என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
மற்றத்திற்கோர் ஆரம்பம் எனும் தொணிப் பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அவர்களின் பங்கேற்புடன் ஐக்கிய தேசியக் கட்சின் பட்டிருப்புத் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவர் எஸ்.சுதர்சனின் ஏற்பாட்டில் னளுதாவளையில் அமைந்துள்ள தனியர் மண்டபத்தில் வியாழக்கிழமை(22.06.2023) மாலை நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…
1942 ஆம் ஆண்டிலே ஐக்கியதேசிக் கட்சி ஆரம்பித்தது எல்லா இனங்களும் இலங்கையர்களாக இருக்க வேண்டும் என்பற்காகவேதான்; காலம் கடந்ததன் பின்னர் இந்நாட்டிலுள்ள மக்கள் பல பிரிவினர்களாகவிருந்து பல கட்சிகளை ஆரம்பித்தார்கள். பின்னர் மக்கள் பல குழுக்களாக இணைந்தார்கள். 1942 இலே மக்களிடத்திலே இருந்த இலங்கைர்கள் என்ற உணர்வு பின்னர் பிரிவினைகளாகியது. இந்த பிரிவினைகளை ஏற்படுத்தியதும் அரசியல்வாதிகளேதான். இதனால் நாடு 75 வருடங்களாக பின்னோக்கிச் செல்வதை எதிர்நோக்க நேரிட்டது.
சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் இனங்களாகவும். மதங்களாகவும் அரசியலிலே பேதத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இதனால் அரசியல்வாதிகள் பலம்வாய்ந்தவர்களாகவம். மக்கள் தாழ்ந்தவர்களாகவும் ஏற்பட்டுவிட்டன.
இன்னும் 25 வருடங்களாகின்றபோது நாடு சுதந்திரம் பெற்று நூறு வருடங்களாகும். இனிமேலும் பிரிவினவாதங்களோடு வாழ்வதா அல்லது ஒரே நாடு என்ற நோக்குடன் வாழ்வதா என சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே எமது சுதந்திரமடைந்து நூற்றாண்டை கொண்டாடுகின்றபோது எமது நாடு முன்னேறிய நாடாக மாறவேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.
நாட்டிலே பல பிரச்சனைகள் இருந்தபோதும் அதனை முகம் கொடுத்தது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மாத்திரமேதான். நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்த ஒரே ஒரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மாத்தரம்தான். எனவே அனைவரும் ரணில் விக்கிரமசிக்கவுடன் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும். எமது தலைவர் இந்த நாட்டைப் வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் பாரமெடுத்தார். அடுத்து வரும் வருடங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, அதிலே தேவநாயகம் போன்ளவர்கள் கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது போல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து எமது கட்சி நார்பாகவும் உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்படல் வேண்டும். அவ்வாறு நடைபெற்றால்தான் நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் வேலை செய்ய முடியும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதில் கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பல்வேறு கோரிக்கைகளையும் கட்சியின் பொதுச் செயலாளரிடம் நேரில் கையளித்ததுடன், கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட சிலரும் இதன்போது நினைவுச் சின்னம் வழங்கி பொதுச் செயலாளரினால் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment