பாடசாலை வளாகங்களைச் சுத்தம் செய்து விசேட
வேலைத்திட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பாடசாலைச் சூழல்களைச் சுத்தம் செய்து மாணவர்களின் மகிழ்ச்சிகரமான கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில், செயற்படுத்தப்படும் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை(29.01.2026) களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்.
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பாடசாலைச் சூழலும் இவ்வாறு சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது பிரதேச சபை ஜே.சி.பி இயந்திரம் மூலம் பிரதேச சபை ஊழியர்கள், பெற்றோர்கள், இணைந்து பாடசாலை வளாகம் சுத்தம் செய்து மாணவர்கள் மகிழ்சிகரமாக தமது கல்வியைத் தொடர்வதற்கு இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 Comments:
Post a Comment