29 Jan 2026

சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் விழிப்புணர்வும்.

SHARE

சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் விழிப்புணர்வும்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சிறு கைத்தொழில்களில் ஈடுபடும் கைத்தொழிலாளர்களின் உற்பத்திகளின் கண்காட்சியும், அவர்களின் தொழில் முயற்சிகளை மென்மேலும் விஸ்த்தரிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை(29.01.2026) வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. 

ரெட்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் எஸ.ரங்கநாதன் நடைபெற்ற இந்நிகழ்வில் ரொட்றிக் கழகத்தின் ஆளுனரின் பிரதிநிதி ம.ஜெகவண்ணன், மாவட்ட அளுனர் டெல்வின் பெரேரா, அக்கழகத்தின் பட்டிருப்பு கழக தலைவர் வைத்தியர் பாமதி ஞானப்பிரகாசம், மதர் சிறிலாங்கா அமைப்பின் தலைவர் வைத்தியர் ஞானகி குருபு, வங்கி முகாமையாளர்கள், மற்றும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது தற்போது கிராமிய மட்டத்தில் சிறு கைத்தொழில்களில் ஈடுபட்டு வரும் முயற்சியாளர்களின் தொழில்களை மென்மேலும் விஸ்த்தரிப்பதற்கு மிகக் குறைந்த வட்டி வீத்ததில் கடன் வசதிகள் பெறுவதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு, தொழில் முயற்சிகளுக்குத் தேவையான ஆலோசனைகள், பதிவு தொடர்பான விடையங்கள் இதன்போது தெழிவூட்டப்பட்டதோடு, உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
























 

 

 

 

SHARE

Author: verified_user

0 Comments: