குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய வீதியின்
2ஆம் குறுக்கு வீதி 05 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியின் 2 ஆம் குறுக்கு வீதி 05 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இன்று (22.01.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மிக நீண்ட காலமாக இவ்வீதி கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் குருக்கள்மடம் கிராம மக்கள் தவிசாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வீதி கொங்கறீட் வீதியாக புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது பிரதேச சபை உறுப்பினர் பரணிதரன் மற்றும் கிராம பொது நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , எனப்பலரும் கலந்து கொண்டனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment