1 Dec 2022

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் மறைவுக்கு கருணாகரம் எம்.எபி அனுதாபம்.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் மறைவுக்கு கருணாகரம் எம்.எபி அனுதாபம்.

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான ஞா.யோகநாதன் சிறந்த மனிதர். நீண்ட காலமாக எமது அமைப்பின் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டவர். அவரது மறைவு எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

அன்னாரின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.

அமைதியான, ஆரவாரமற்ற சமூக சேவையாளராக இருந்த யோகநாதன் அவர்களின் இழப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

அன்னாரின் மறைவைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வருகின்ற கருத்துக்கள், அனுதாபங்களைப் பார்க்கின்ற போது, அவர் எந்தளவுக்கு சமூகத்தோடு இணைந்து பணியாற்றியிருக்கின்றார் என்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அத்தோடு, களுதாவளையைச் சேர்ந்த தவிசாளர் ஞா.யோகநாதன் களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலன சபைத் தலைவராக நீண்டகாலம் இறைதொண்டும் ஆற்றிய ஒரு இறையன்பரும்கூட.

அன்னாரின் இழப்பில் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் பொறுமையையும், சிறந்த வாழ்வையும் வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.

ஒருவர் துக்கத்தை கடக்கும்போது, அவருக்கு தேவைப்படுவது அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அனுதாபம் மட்டுமே. எனவே உங்கள் நண்பர் துக்கத்தை கடந்து செல்கிறார், அந்த வகையில், அரசியல்வாதியாக, மக்கள் சேவகனாக, பிரதேச சபைத் தவிசாளராக என பல வகைகளிலும் மக்களுக்கு பங்காற்றிய ஒரு மனிதரை இழந்திருக்கிறோம் என்ற வகையில் அனைவரும் அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம். என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: