1 Dec 2022

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மரணம்.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மரணம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் வியாழக்கிழமை(01) அதிகாலை மரணம் மரணமடைந்துள்ளார்.

சிறிது நாட்கள் சுகயீனமுற்றிருந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ)  சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களுதாவளை வட்டாரத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு பின்னர் அப்பிரதேச சபையின் தவிசாளராகவும் தேர்வு செய்யப்பட்டு மரணிக்கும் வரைக்கும் அப்பதவியை வகித்து கட்சி பொதங்களின்றி சபையை வழிநடாத்தி வந்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோகட்சியின் மத்தியகுழு உறுப்பினராக அன்னார்கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகளன ஆலயத்தின் மிக நீண்ட காலமாகவிருந்து மரணிக்குவம் வரையில் தலைவராக செயற்பட்டு வந்துள்ளார்சமயப்பணிசமூகப்பணிஅரசியலூடாக மக்கள் சேவை செய்து வந்த தவிசாளரின் திடீர் மறைவுக்கு பொதுமக்கள்ஆதரவாளர்கள்மக்கள் பிரதிநிதிகள்என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) களுதாவளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று களுதாவளை பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: