1 Dec 2022

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினை தாமதாக்கி மட்டக்களப்பு கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

SHARE

(கமல்) 

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினை தாமதாக்கி மட்டக்களப்பு கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

வெளியாகிய க.பொ.த.சா.த பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இலங்கை பரீட்சைத் திணைக்களாத்தினால் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலின் அடிப்படையிலையே மட்டகளப்பு கல்வி வலயம் முதலாமிடத்தை பெற்றுள்ளது.

அகில இலங்கை ரீதியிலுள்ள 100 கல்வி வலயங்களுக்குள் முதலிடத்தை பிடித்து மட்டக்களப்பு  மாவட்டத்திற்கும், கிழக்கு  மாகாணத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளது. 

இதன் பிரகாரம் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து குறித்த பரீட்சைக்கு 2056 மாணவர்கள் தேற்றியிருந்தனர் அதில் 1789 மாணவர்கள் க.பொ.த.உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்துடன் 7 மாணவர்கள் அனைத்து பாடத்திலும் சித்தியடைய தவறியுள்ளதாக பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே பல தசாப்த யுத்த சூழ் நிலைக்கு பிற்பாடு இவ்வாறான மகத்தான சாதனையினை புரிந்த மாணவ செல்வங்களை வாழ்த்துவதுடன் இதற்கென  முன்நின்று உழைத்த கல்விப்பணிப்பாளர், திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் உட்பட அவருடன் இணைந்த குழாமினர், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் மாவட்ட கல்வி சமூகத்தினர்,  மற்றும்  அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: