மட்டக்களப்பில் 1078 விவசாயிகளுக்கு மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் காப்பறுதிப்பணம் வழங்கப்படும்.
கடந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு எதிர்வரும் 10.03.2022 இற்கு முன்னர் காப்பறுதிப் பணம் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் செவ்வாய்கிழமை(22) தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….
கடந்த 2020 – 2021 பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட விசாயிகளுக்குரிய காப்புறுதிப்பணம் இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு உரிய காப்புறுதிப்பணம் வழங்கப்படவில்லை. இவ்விடையம் குறித்து ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமாரின் கவனத்திற்கு மாவட்டத்திலுள்ள விவசாய அமைப்புக்களும், வட்டவிதானைமாரும், விவசாயிகளும் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க சந்திரகுமார் விவசாய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதற்கமைய ஜனதிபதியின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 2022.03.10 ஆம் திகதிக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்ததில் 1078 விவசாயிகளுக்குரிய காப்புறுதிப்பணம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment