அழுத்கம தர்கா நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒரு வர் மட்டக்களப்பில் கைது.
அழுத்கம தர்கா நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இராணுவத்தினரால் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு வழங்கிய தகவலின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மட்டக்களப்பு தாண்டவன்வெளி வாவிக்கரை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பெறுமதியான ஒருதொகை வல்லப்பட்டையுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட நபர்
அழுத்கம தர்கா நகர் பகுதியை சேர்ந்த எனவும் குறித்த வல்லப்பட்டையினை
மட்டக்களப்பு நகரில் அதிக விலையில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரபட்ட நிலையிலே வல்லப்பட்டையுடன்
குறித்த நபர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment