வடக்குக் கிழக்குப் பகுதிகளில் கூடிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப வரவு செலவுத் திட்டத்திற்கு சாதகமாக வாக்களிக்கும் - ஸ்ரீநேசன் எம்.பி.
யத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் கூடிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப வரவு செலவுத் திட்டத்திற்கு சாதகமாக வாக்களிக்கும் அடுத்து வருவது இதை விட மோசமாக இருந்தால் நாங்கள் இருப்பதை வைத்து திருப்தியடைவதே சிறந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (31) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
வடக்குக் கிழக்கில் ஊரக எழுச்சித்திட்டங்கள் மூலம் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் திருப்தியடைந்தால் எமது கட்சி அதனை சாதகமாகப் பரிசீலிக்கும். இந்த அரசாங்கத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கிராம அபிவிருத்தி எழுச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் வழங்கும் உத்தவாதங்களை கடைப்பிடிக்கு மேயானால் நாங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகச் செயற்படுவோம். எமது கட்சி கூடிக்கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுக்கும் இதேவேளை எமது பார்வை என்னவென்றால் இது இல்லாவிட்டால் அடுத்தது என்ன அடுத்து வருவது இதை விட மோசமாக இருந்தால் நாங்கள் இருப்பதை வைத்து திருப்தியடைவதே சிறந்தது.
அபிவிருத்தியில் அதிருப்தி இருந்தால் இப்போதுள்ள நிதியமைச்சர் ஊடாக யத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் கூடிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றபோது எமது கட்சி சாதமான முடிவை எடுக்கும். இறுதி முடிவானது கட்சித் தலைமை ஒன்று கூடி தீர்மானிக்கும். வடக்குக் கிழக்கிலுள்ள பிரதேச சபைகளுக்கு வளங்கள் அதிகளவில் கிடைக்க வேண்டும் சகல பகுதிகளிலும் சமனான பார்வையில் நிதிகள் பங்கிடப்படுமேயானால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்ப வரவு செலவுத் திட்டத்திற்கு சாதகமாக வாக்களிக்கும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment