கிழக்குப் பல்கலைக் கழக ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகம் நினைவாக தாக சாந்தி நிலையம் அமைத்து குளிர்பானம் விநியோகம்
மட்டக்களப்பு செங்கலடியை பிறப்பிடிமாக கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவி ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த முன்னாள் அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகம் அவர்களின் 109 வது பிறந்த தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 26.03.2019 செங்கலடியில் தாகசாந்தி நிகழ்வு நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேசசபை உறுப்பினர் வனேந்தரன் சுரேந்திரனின் ஏற்பாட்டில் இத் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு பிறந்ததின நாள் நினைவு கூரப்பட்டது.
இந் தாகசாந்தி வழங்கும் நிகழ்வில் சமூக சேவையாளர் கந்தையா கலைவாணியும் கலந்து கொண்டார்.
செங்கலடி நகரில் அமைக்கப்பட்டிருந்த தாகசாந்தி நிலையத்தின் ஊடாக பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழகப்பட்டன.
செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகம் அவர்களின் சேவைகள் வரலாற்றில் நினைவு கூறப்பட வேண்டியவை
கணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகம் (முயnயியவாipடைடயi றுடைடயைஅ னுநஎயயெலயபயஅ 26 மார்ச்சு 1910 – 17 டிசம்பர் 2002) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
தேவநாயகம் 1910 மார்ச் 26 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி என்ற கிராமத்தில் உடையார் குடும்பத்தில் கணபதிப்பிள்ளை வில்லியம் பியற்றிஸ்தங்கம் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி கொழும்பு சென் யோசேப்பு கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.
விளையாட்டில் ஈடுபாடு கொண்ட தேவநாயகம் 1930 ஆம் ஆண்டில் பாடசாலைத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கினார்.
கிழக்கிலங்கை டென்னிசு சம்பியன் பட்டத்தை வென்றார். பள்ளிப் படிப்பை முடித்தது இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து வழக்கறிஞரானார்.
பல ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
அரசியலில்
1947 நாடாளுமன்றத் தேர்தலில் கல்குடா தேர்தல் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளர் வி. நல்லையாவிடம் 2400 வாக்குகளால் தோற்றார்.
1965 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 6566 வாக்குகள் பெற்று முதற் தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.
1970 1977 தேர்தல்களில் மீண்டும் தெரிவானார்.
அமைச்சரவையில்
1977 சூலையில் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அமைச்சரவையில் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1980 பெப்ரவரியில் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1989 வரை அவர் இப்பதவில் இருந்தார். 1989 இறுதிப் பகுதியில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தினார்.
சமூகப் பணி
தேவநாயகம் அனைத்திலங்கை கூட்டுறவு சங்கங்களின் பிரதித் தலைவராக இருந்தார்.
இவரின் பெயரில் மட்டக்களப்பு நகரில் 'தேவநாயகம் மண்டபம்' நிறுவப்பட்டது.
இவரது அரசியல் செல்வாக்கினால் மட்டக்களப்பில் வந்தாறுமூலையில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி நிறுவப்பட்டது.
கலாநிதிப் பட்டம்
தேவநாயகத்திற்கு கிழக்குப் பல்கலைக்கழகம் 2013 ஏப்ரலில் (மறைவிற்குப் பின்னரான) கௌரவக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
மறைவு
தேவநாயகம் 2002 டிசம்பர் 17 இல் கொழும்பில் காலமானார்.
இவரை பலர் மறந்த போதும் இளம் தலைமுறையினருக்கு மீண்டும் நினைவு படுத்தியுள்ளது மட்டக்களப்பு இளைஞர் சமூகம்.
0 Comments:
Post a Comment