19 Dec 2025

வெள்ளத்தில் மூழ்கும் களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் - கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு.

SHARE

வெள்ளத்தில் மூழ்கும் களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் - கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு.

தற்பொது பெய்து வரும் வட கீழ் பருவப் பெயற்சி மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான தாழ் நிலங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் வெள்ளநீர் வழிந்தோட முடியாமலுள்ள பகுதிகளில் மக்கள் மிகுந்த அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதையும் காணமுடிகின்றது. இதுஇவ்வாறு இருக்க பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

பாடசாலை வளாகம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அங்கு கல்வி பயிலும், மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதோடு கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு பாடசாலை வழாகம் முற்றாக வெள்ளநீரினால் மூழ்கியுள்ளதனால் தமது பிள்ளைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலமையும் ஏற்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். 

இதனிடையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம், பாடசாலை நிருவாகத்தினர் வெள்ள நிலமை தொடர்பில் தெரிவித்ததற்கு இணங்க, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தற்காலிக கால்வாய் அகழ்ந்து பாடசாலையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வழிந்தோட செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.   

வருடாந்தம் இவ்வாறு களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயம் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்குவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வாக பாடசாலை வளாத்தில் மண் இட்டு நிரப்பி, வடிகான் அமைத்து தரவேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை முன் வைக்கின்றனர்.

























SHARE

Author: verified_user

0 Comments: