2 Oct 2018

தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ளது - நடராசா

SHARE
தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் காரணமாக உலகத்தில் எந்த இடத்திலும் என்ன விடையங்கள் நடைபெற்றாலும் அவைகளனைத்தையும், நாம் ஒரே இடத்திலிருந்து கொண்டு அவதானிக்கக் கூடிய வசதிவாய்ப்புக்கள் தற்போது தொழில் நுட்பத்தின் காணமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராச தெரிவித்துள்ளார்.


தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் (நைற்றா) புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சி நெறிகளுக்கான விளக்கங்களை தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கும், அவர்களது பெற்றோருக்குமான விழக்கமளிக்கும் நிகழ்வு திங்கட் கிழமை (01) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….


தொழில் நுட்பத்தில் எமது நாட்டு மக்களின் அறிவு விருத்தி மேலோங்க வேண்டும் என்ற நோக்கில் இலங்கையில் கல்வித்திட்டத்திலும் கல்விப் பொத்தர உயர்த்தரத்தில் தொழில் நுட்பப் பிரிவு என்ற ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றால் எமது எதிர்கால சமுதாயமும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் என எதிர்பார்க்கலாம். தொழில் நுட்ப அறிவு எமது இளைஞர் யுவதிகளிடத்தில் அதிகம் இருக்குமானால் தொழில்வாய்ப்புக்கள் பெற்றுத்தருமாறு போராட்டங்களை நடாத்த வேண்டியதில்லை. தற்போது பட்டப்படிப்புக்களை முடித்துவிட்டு தொழிலுக்காக போராட்டங்களை நடாத்த வேண்டிய நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இது எமது கல்வித்திட்டத்திலுள்ள குறைபாடாகத்தான் அதனை நான் கருதுகின்றேன். வெளிநாடுகளில் அரச தொழில் பெறுபவர்கள் குறைவு கம்பனிகளிலும், தனியார் அமைப்புக்களிலும் அதிக வேதனத்திற்குத் தொழில் செய்கின்றார்கள்.

எனவே தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக அரசு ஓர் திட்டத்தை வகுத்து இந்தப் பயிற்சிகளை வழங்கத்திட்டமிட்டுள்ளது. இது எமது பகுதியிலுள்ள படித்துவிட்டு தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைகின்றது.

படித்து பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று தொழில் இல்லாமல் பல இளைஞர் யுவதிகள் வீட்டிலிருக்கின்றார்கள் ஆனால் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ள இந்தஒரு வருட பயிற்சியின் பின்னர் தகுந்த வேதனத்துடன் வேலைகிடைத்துவிடக் கூடிய சந்தர்ப்பம் அமையப்பெற்றுள்ளது. இதனை எமது பிரதேச மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: