மட்டக்களப்பு எல்லைப்புறத்திலுள்ள நெடியகல்மலை பகுதியில் பொலநறுவையிலிருந்து வந்து பிக்குமார் விகாகரை அமைத்து வருகின்றார்கள் - ஸ்ரீநேசன் எம்.பி
தற்போது நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்கள் நேரடியாக எம்மிடம் விடயங்ளைத் தெரிவித்து வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் அமைந்துள்ளது நெடியகல் மலை எனும் பிரதேசமாகும். அங்கு தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அந்த இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீற்றருக்கு அப்பால் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் அந்த 15 கிலோமீற்றருக்கு அப்பாலிருப்பது பொலநறுவை மாவட்டமாகும். அப்பகுதியிலிருந்து எமது தமிழ் மக்கள் வாழுகின்ற மட்டக்களப்பு எல்லைப்புறத்திற்கு பிக்குமார் வந்து அங்குள்ள நெடியகல்மலை எனும் பகுதியில் பௌத்த மத வழிபாட்டு தலம் ஒன்றை அமைப்பதற்குரிய செயற்பாட்டில் பிக்குமார் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
என இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று சனிக்கிழமை(02.11.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
கிழக்கு மாகாணத்தில் முன்னர் ஆளுநராக இருந்த அனுராதா ஜஹம்பத் அவர்கள் இருக்கின்ற காலத்தில் அந்த ஆளுனர் மக்களுக்கு சேவை செய்த செய்த காலத்தைவிட பிரச்சனைகளைத்தான் உருவாககி ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அந்த வரிசையில் தான் இந்த நெடியகல் மலை பகுதியிலும் அவருடைய நிர்வாகக் காலத்தில்தான் இந்த பௌத்தமத வழிபாட்டுத்தலம் ஒன்றை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தார்.
பௌத்தமத மக்கள் வாழும் இடங்களில் பௌத்த வழிபாடு தலங்கள் அமைவது அது சாதாரண விடயம். இந்து மக்கள் வாழ்கின்ற பகுதியில் அவருடைய வழிபாட்டுத்தலங்களும், கிறிஸ்தவ மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும், இஸ்லாமிய மக்கள் வாழ்கின்ற வகையில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும், அமைவது இயற்கையானது. அதை ஏற்றுக் கொள்ளக் கூடியது, நியாயமானது, ஆனால் எந்த ஒரு பௌத்த சிங்கள குடிமகனும் வாழ்ந்திராத இடத்தில் அந்த நெடிய கால்மலை எனும் இடத்தில் 15 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து வந்து பௌத்த துறவிகள் அந்த இடத்தில் பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது கடந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருந்திருந்தவர்கள் அவர்களுடைய காலத்தில் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த காரணத்தினால் அரசாங்கத்தின் சலுகைகளை பெறுகின்றார்கள் என்ற காரணத்தினாலும், இந்த விடயங்களை அவர்கள் கண்டும் காணாததுபோல் விட்டுவிட்டார்கள்.
இப்போது இருக்கின்ற ஆட்சியில்கூட அதன் தொடர்ச்சி காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வனஇலாகாவுக்கு சொந்தமான அந்த பகுதியை குறித்த வன இலாகா பிரிவினர் உரிய இடத்தை பௌத்த வழிபாடு அமைப்பதற்குரிய அனுமதியை வழங்கி இருக்கின்றார்கள். இப்போது சர்வ சாதாரணமாக அங்கு இந்த பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு பௌத்த துறவிகள் வந்து செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. காலப்போக்கில் அவர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் அனைத்தும் அமைக்கப்படும். பின்னர் அவர்களை பராமரிப்பதற்கும், சேவைசெய்வதற்குரிய சிங்கள மக்களை குடியேற்ற வேண்டிய தேவை ஏற்படும், அவற்றுக்கு ஏதும் பிரச்சனைகள் ஏற்படும் வகையில் அங்கு பாதுகாப்பும் வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும், இராணுவ கட்டமைப்பு அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே கிளக்கு மாகாணத்தை இவ்வாறு திட்டமிட்டு தமிழ் மக்களிடமிருந்து ஆக்கிரமிப்பதற்கான ஒரு செயற்பாடாகதான் இந்த செயற்பாட்டை நாம் பார்க்க முடிகின்றது.
நல்லாட்சி, நல்லிணக்கம், சமரசம், போன்றவற்றையெல்லாம் சிந்திக்கின்ற இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த அதிகாரி பௌத்த இடிப்பாடுடனாக விடயங்களை அவ்விடத்தில் விதைத்துவிட்டு அங்கு பௌத்த வழிபாட்டுத்தலம் எப்போவோ இருந்திருக்கின்றது. என்பதை தாங்கள் அவ்விடத்தில் இட்ட சின்னங்களை வைத்துக் கொண்டு அடையாளப்படுத்தி இருப்பதாக ஒரு பௌத்த துறவி தெரிவித்திருந்தார்.
அதுபோல் கிழக்கிலும் புதிதாக பௌத்த வழிபாட்டுத் தலம் ஒன்று அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதற்குரிய வீதியையும் வீதியை அபிவிருத்தித் திணைக்களம் அமைத்துக் கொண்டிருக்கின்றது. இவ்விடையம் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளார்கள். எனவே ஜனாதிபதியிடவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும், குறிப்பிட்ட மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் வசிக்காத பிரதேசங்களில் அவர்கள் சாராத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பது என்பது நல்லிணக்கம் அல்லது சமரசமான வாழ்வுக்கான சூழ்நிலை குழப்பப்படும் என தெரிவிக்கின்றேன்.
இதுபோன்றுதான் மைலத்தமடு, மாதவனை, போன்ற பிரதேசங்களிலும் பொலன்நறுவை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மையின மக்கள் வந்து ஆக்கிரமித்து அங்கு இருக்கின்ற தமிழ் மக்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்களில் பெரும்பான்மையின மக்களால் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கால்நடைகளை வளர்க்க முடியாமல் உள்ளார்கள், எனவே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். குறிப்பாக குறித்த பௌத்தர்கள் இல்லாத இடத்தில் அமைத்துக் கொண்டிருக்கின்ற அந்த பௌத்த வழிபாட்டுத்தலத்தை உடன் நிறுத்தப்பட வேண்டும். அது நிறுத்தப்படாது விட்டால் அதுநல்லிணக்க அல்லது மகிழ்ச்சியாக வாழ்கின்ற ஒரு சூழலை குழப்பக் கூடியதாக இருக்கும். என்பதை நான் அரசாங்கத்திற்கு செய்தியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
நாங்கள் இந்த ஒரு மதத்திற்க்கோ, இனத்திற்கோ, மொழிக்கோ, எதிரானவர்கள் அல்ல. ஆனால் கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற குடியேற்றங்கள் எல்லாம் இவ்வாறு நடைபெற்றிருக்கின்றது. கடந்த காலத்தில் அம்பாறையில் தீக வாவி எனப்படுகின்ற ஒரு இடத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். அது உண்மையிலேயே பொன்னன் வெளி அல்லது மாணிக்கமடு எனப்படுகின்ற ஒரு இடமாகும். அந்த இடத்தில்கூட பௌத்த இடிபாட்டு எச்சங்களை ஒரு பொலிஸ் அதிகாரி அங்கு வந்து இட்டுச் சென்றதை அவதானித்ததாக ஒரு விவசாய அக்காலத்தில் கூறியிருந்தார். அவற்றைக் கொண்டு தெளித்துவிட்டு பின்னர் அந்த இடத்தில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அன்றைய காலத்தில் அல்லது புராதன காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை தெரிவித்து அதனை ஆக்கிரமிக்கின்ற நிலமை காணப்படுகின்றது.
அதுபோல் மக்கள் வேளாண்மை செய்தியில் ஈடுபட்ட காணியில் வன இலாகா துறையினர் எல்லை கற்களை இட்டு வருகின்றார்கள். எனவே மக்களின் வாழ்வாதாரம் மேற்கொள்ளும் இடங்களை கற்கள் இட்டு வன பிரதேசமாக பிரகடனப் படுத்துகின்றார்கள். “காட்டுப் பிரதேசமாக இருந்த இடத்தை பௌத்த வழிபாட்டுத் தலத்திற்கும், தமிழர்களின் வாழ்வாதாரம் செய்கின்ற இடத்தை வன பகுதியும் என பிரகடனப்படுத்துகின்றாரகள்” இது ஒரு பாரபட்சமான செயற்பாடாகும் சிங்கள பௌத்தம் என்றால் அனுமதி வழங்கப்படுகிறது தமிழ் பேசும் மக்களுக்கு அந்த அனுமதியை வழங்காமல் கற்களை நட்டுக்கொண்டு செல்கின்றார்கள். இந்த பாரபட்சமான செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தடுக்க வேண்டும். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் தடுக்க வேண்டும், இந்த விடயத்தை நாங்கள் நிச்சயமாக அரசாங்கத்தின் காதுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக நாம் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். எங்களுக்கு பயமுறுத்தல், அச்சுறுத்தல் இல்லாத இடத்தில் நாங்கள் பாதுகாப்பை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தற்கால சூழ்நிலையைப் பார்த்தால் சூட்டு சம்பவங்கள் பல இடங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவராக இருந்தவர்கூட சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். எனவே ஒரு விடயம் நடைபெற்றதன் பின்னர் அது பற்றி பேசுவதைவிட நடக்காமல் பாதுகாத்துக் கொள்வதுதான் அறிவு சார்ந்த ஒரு அணுகுமுறையாக இருக்கும். எனவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கருதினால் அந்த பாதுகாப்பை கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
மக்களோடு இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை ஆபத்தான நிலை இல்லை என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்திருக்கின்றார். அதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் தற்போதைய நிலையில் கூலிக்கு கொலை செய்கின்றவர்கள். இருக்கின்றார்கள் அவர்கள் அதனை தொழிலாக செய்கின்றார்கள். இந்த அரசாங்கத்தை குழப்ப வேண்டும் என நினைக்கின்றவர்கள்கூட அல்லது அரசாங்கம் பாதாள உலகம் குழுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதனால் ஆத்திரப்படுகின்றவர்கள்கூட விபரீதமாக செய்வதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக சென்று தமது சேவைகளை செய்ய முடியாமல் இருக்கும். இந்த ஒரு வருட காலத்திற்குள் பல துப்பாக்கி சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்புத் தேவை இல்லை என்ற கருத்து ஒரு தன்னிச்சையான கருத்தாகதான் பார்க்க முடியும். இன்றைய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேவையான நிலைமை காணப்படுகிறது.
எனவே அரசாங்கம் இதனை சிறுவிடையமாக கருதாமல் பாராளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பை அரசாங்கம் வழங்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment